scorecardresearch

ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க… சீரியல் முடியப் போகுதா? மாடர்ன் கண்ணம்மாவை கலாய்க்கும் ரசிகர்கள்

கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியனின் இந்த க்யூட்டான வீடியோவைப் பார்த்த சில நெட்டிசன்களும் ரசிகர்களும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க… சீரியல் முடியப் போகுதா எனக் கேட்டு மாடர்ன் கண்ணம்மாவை கலாய்த்து வருகின்றனர்.

barathi kannamma serial, barathi kannamma, vijay tv, actress roshni haripriyan dance in modern look, roshni haripriyan with modern look, பாரதி கண்ணம்மா, கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியன், கண்ணம்மா என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க, பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகுதா, மாடர்ன் கண்ணம்மாவை கலாய்க்கும் ரசிகர்கள், Barathi kannammma, vijay tv, serial, roshni haripriyan modern dance

பாரதி கண்ணம்மா சீரியலில், எப்போதும் வழிய எண்ணெய் தேய்த்து வாரி பின்னிய ஜடை, கண்கள் நிறைய மை, எப்போதும் சேலையில் பாந்தமாகவே பார்த்து பழகிய கண்ணம்மாவை மாடர்ன் டிரஸ்ஸில் பார்த்திருக்கிறீர்களா? அதுமட்டுமல்ல, அவர் சந்தோஷத்தில் மான்போல துள்ளி சுற்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இங்கே பாருங்கள்.

ஆனால், சில நெட்டிசன்கள் கண்ணம்மா சந்தோஷத்தில் துள்ளி விளையாடுவதைப் பார்த்து, சீரியல் முடியப் போகுதா என்று கேள்வி எழுப்பி கண்ணம்மாவை கலாய்த்து வருகிறார்கள்.

தமிழ் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 சீரியலாக வலம் வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் நம்பர் 1 அல்லது 2வது இடத்தில் இருந்து வருகிறது. சாக்லேட் பிரவுன் நிறம், வழிய எண்ணெய் தேய்த்து வாரி பின்னிய ஜடை, கண்கள் நிறைய மை, பாந்தமாக சேலை கட்டி ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகை ரோஷ்னி ஹரிபிரியன். பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழும் நிலையில், பாரதி திருந்துவது போல சிந்தித்த சீரியல் புரோமோ வீடியோ வெளியகி பரபரப்பை எற்படுத்தியது.

இந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கிற ரோஷ்னி ஹரிபிரயன், சேலையில் பாந்தமாக வலம் வந்துகொண்டிருந்தவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் மாடர்ன் டிரஸ்ஸில் துள்ளி குதித்து சந்தோஷமாக விளையாடுகிறார். கண்ணம்மா ரோஷினி ஹரிபிரியனின் இந்த க்யூட்டான வீடியோவைப் பார்த்த சில நெட்டிசன்களும் ரசிகர்களும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க… சீரியல் முடியப் போகுதா? மாடர்ன் கண்ணம்மாவை கலாய்த்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Barathi kannamma serial actress roshni haripriyan modern look