'கடல்ல இருக்குது நண்டு; இந்த சீரியலுக்கு இல்லையா எண்டு' பொறுமை இழந்த பாரதி கண்ணம்மா ரசிகர்கள்

கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் இந்த பாரதி கண்ணம்மாவ பார்க்கிறது தப்புதான் என்று ஒரு ரசிகையும், சிறந்த பொறுமைசாலி அவார்டு பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மற்றொரு ரசிகரும் கமென்ட் செய்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil serial update: bharathi tells Lakshmi who is her father in Bharathi kannama

பாரதி கண்ணம்மா சீரியலில் இனிமேல் லட்சுமி ஆட்டம் தான். மொத்த உண்மையையும் தெரிந்து கொண்ட லட்சுமி, தனது அம்மா கண்ணம்மாவுக்காக இனி பாரதி குடும்பத்தையே கதற வைக்க முடிவு எடுத்துவிட்டார்.

Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வாரம் என்றே சொல்லலாம். இத்தனை ஆண்டுகளாக அப்பாவை தேடி அலைந்த குழந்தை லட்சுமிக்கு அவரின் அப்பா யார்? என்ற உண்மை தெரிந்து விட்டது.

அதுமட்டுமில்லை நமக்கு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என இவ்வளவு சொந்தங்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் எல்லோருடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை இப்போது இல்லை. பாரதி, கண்ணம்மாவை பிரிந்து இருப்பதற்கான காரணம் லட்சுமிக்கு தெரியவில்லை.
ஆனால் இதுவரை கண்ணம்மாவால் கேட்க முடியாத அனைத்து கேள்விகளையும் சாட்டையடி போல் சவுந்தர்யாவை பார்த்து கேட்கிறார் லட்சுமி. பதில் இல்லாமல் தவிக்கிறார் சவுந்தர்யா.

நேற்றைய எபிசோடில் நடந்தவை..

இந்த பக்கம் அகிலன், லட்சுமியிடம் எல்லா உண்மையையும் சொல்ல போகிறேன் என்கிறார். அதற்கு அஞ்சலி இப்போது வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார். மீண்டும் லட்சுமி யோசிக்க தொடங்குகிறார். பாரதி கண்னம்மாவும் ஏன் பிரிந்து இருப்பார்கள் என்ற காரணத்தை பற்றி தான் மறுபடியும் யோசிக்கிறார். ஹேமாவுடன் சேர்ந்து இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். இனிமே;ல் பாரதி கண்னம்மாவில் குழந்தைகள் ஆட்டம் தான் போல.

கலர்ஸ் தமிழில் என்ட்ரி ஆன வெண்பா… அப்போ பாரதி கண்ணம்மா சீரியல்?

Advertisment
Advertisements

இந்நிலையில், இந்த சீரியலை பார்க்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் ரசிகர்கள். யூடியூப்பில் நேற்றைய புரோமா காட்சி பதிவேற்றப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியலுக்கு முடிவு கிடையாத என்று கதறினர். கமென்டில் சில சுவாரசியமான பதிவுகளும் இருந்தன.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் இந்த பாரதி கண்ணம்மாவ பார்க்கிறது தப்புதான் என்று ஒரு ரசிகையும், சிறந்த பொறுமைசாலி அவார்டு பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மற்றொரு ரசிகரும் கமென்ட் செய்துள்ளனர்.

publive-image

கடந்த 3 ஆண்டுகளாக 10 கதாபாத்திரங்கள் ஒரே நிகழ்வை பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று இன்னொரு ரசிகரும் கமென்ட் செய்திருக்கிறார்.
உச்சகட்டமாக 'கடல்ல இருக்குது நண்டு; இந்த சீரியலுக்கு இல்லையா எண்டு' என ஒரு ரசிகர் மனம் வெறுத்துபோய் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial Bharathi Kannamma Serial Tamil Serial Update Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: