நடு ராத்திரியில் புறப்பட்டு வீட்டுக்குப் போன பாரதி – கண்ணம்மா; ரெண்டு பேருக்கும் ஒரே காரணம்!

பாரதியும் கண்ணம்மாவும் நடு ராத்திரியில் ஒரே நேரத்தில் பாரதியின் வீட்டுக்கு ஒரே நோக்கத்துடன் சென்றுள்ள இந்த வார புரமோ வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Barathi Kannamma Serial, Barathi and Kannamma going to home at midnight for on aim, பாரதி கண்ணம்மா சீரியல், நடு ராத்திரியில் புறப்பட்டு வீட்டுக்குப் போன பாரதி - கண்ணம்மா, பாரதி கண்ணம்மா புரமோ, Barathi Kannamma promo, Barathi Kannamma serial latest promo, viral video

பாரதி கண்ணம்மா சீரியலில் நீதிமன்றம் பாரதியையும் கண்ணம்மாவையும் 6 மாதங்கள் சேர்து வாழ உத்தரவிட்டுள்ள நிலையில், கண்ணம்மா வீட்டில் இருக்கும் பாரதியும் கண்ணம்மாவும் நடு ராத்திரியில் புறப்பட்டு பாரதி வீட்டுக்கு போகிறார்கள். அங்கே போன பிறகுதான், 2 பேரும் ஒரே காரணத்துக்காக போயிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சினிமாவில் நடிக்கச் சென்றதால் அவருக்கு பதிலாக நடிகை வினிஷா நடித்து வருகிறார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி மாற்றப்பட்டதால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்ததால் பாரதி கண்ணம்மா சீரியல் டாப் 5 பட்டியலில் இருந்து சறுக்கியுள்ளது. அதே நேரத்தில் புதிய கண்ணம்மா வினிஷாவை ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று வருகிற்னர். இதனிடையே, வில்லி வெண்பாவாக நடித்து வந்த ஃபரீனா ஆசாத் பிரசவத்திற்கு சென்றுள்ளார். அதனால், சில எபிசோடுகளாக அவர் காட்டப்படவில்லை.

இந்த சூழ்நிலையில்தான், பாரதி கண்ணம்மாவை டிவோர்ஸ் செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். நீதிமன்றம் பாரதியை கண்ணம்மா வீட்டுக்கு சென்று தங்குகிறார். அங்கே சென்று பிடிவாதமாக கண்ணம்மாவை கோபப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். கண்ணம்மாவுடன் வளரும் அவளுடைய மகள் லக்ஷ்மி பாரதியின் வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறாள்.

கண்ணம்மா வீட்டில் இருக்கும் பாரதியும் கண்ணம்மாவும் நடு ராத்திரியில் புறப்பட்டு பாரதி வீட்டுக்கு போகிறார்கள். அங்கே போன பிறகுதான், 2 பேரும் ஒரே காரணத்துக்காக போயிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில், இந்த வார எபிசோடுகளுக்கான புரமோவில், கண்ணம்மா வீட்டில் பாரதியும் கண்ணம்மாவும் தனித் தனியே தூங்குகிறார்கள். அப்போது நள்ளிரவில் பாரதி மகள் ஹேமாவைப் பற்றியும் கண்ணம்மா மகள் லக்ஷ்மியைப் பற்றியும் கனவு கண்டு அலறி எழுகிறார்கள். உடனடியாக, பாரதி தனது மகளைப் பார்க்க வேண்டும் என்று தனது வீட்டுக்கு நடு ராத்திரியில் செல்கிறான். அதே போல, கண்ணம்மாவும் தனது மகள் லக்ஷ்மியைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடு ராத்திரியில் பாரதியின் வீட்டுக்கு செல்கிறாள்.

அங்கே போன பிறகுதான், இருவரும் ஒரே நேரத்தில் விட்டுக்கு வந்திருப்பது தெரிகிறது. கண்ணம்மா தன்னை தொடர்ந்து வந்துள்ளதாக நினைத்த பாரதி, நீ ஏன் இங்கே வந்தாய் என்று கேட்கிறான். அதற்கு கண்ணம்மா நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்களோ அதற்காகத்தான் நானும் வந்திருக்கிறேன் என்று உறங்கிக்கொண்டிருக்கும் லக்ஷ்மியை முத்தமிட்டு சொல்கிறாள். பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கும் சௌந்தர்யா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இப்படி பாரதி கண்ணம்மா சீரியல் இவரும் சேர்வதற்கான நிறைவை நோக்கி செல்கிறது.

பாரதியும் கண்ணம்மாவும் நடு ராத்திரியில் ஒரே நேரத்தில் பாரதியின் வீட்டுக்கு ஒரே நோக்கத்துடன் சென்றுள்ள இந்த வார புரமோ வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma serial barathi and kannamma going to home at midnight for on aim

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com