கெட்டப்பை மாற்றிய பாரதி வீடியோ… அப்போ பாரதி கண்ணம்மா சீரியல் முடிஞ்சு போச்சா?

அருண் கெட்டப்பை மாற்றியுள்ளதால் ரசிகர்கள் பலரும் பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்துவிட்டதா என்று அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், “அங்க போய் டிஎண்ஏ டெஸ்ட் எடுக்காமல் இங்க உனக்கு டான்ஸ் கேக்குதா ப்ரோ…” என்று ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர்.

Barathi Kannamma Serial going to end, Barathi Kannamma, Roshni Haripriyan, barathi arun, Barathi Arun changes his get up, Barathi character Arun change his get up, பாரதி கண்ணம்மா சீரியல் முடிஞ்சு போச்சா, கெட்டப்பை மாற்றிய பாரதி, கெட்டப்பை மாற்றிய அருண் வீடியோ, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி, Barathi kannamma Arun, vijay tv, tamil serial news

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அருண் பிரசாத் தனது கெட்டப்பறை மாற்றியதோடு, நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதியை மறந்து நானாக இருக்கிறேன் என்று வீடீயோ வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் அப்போ பாரதி கண்ணம்மா சீரியல் முடிஞ்சு போச்சா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று டாப் 5 சீரியல் பட்டியல் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத்தும் ஹீரோயின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியனும் நடித்து வந்த நிலையில், ரோஷினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததையடுத்து, அவர் சீரியலில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக நடிகை வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ரோஷினி மாற்றப்பட்டதால் ரசிகர்கள்பலரும் அதிருப்தி அடைந்தனர். பாரதி சீரியலின் ஜீவனாக இருந்துவரும் ரோஷினியை மாற்றுவதைவிட சீரியலை முடித்துவிடுவது நல்லது என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

கண்ணம்மாவாக நடித்துவரும் வினுஷா அப்படியே அந்த கதாபாத்திரத்துக்கானவராக பொருந்திப்போனாலும், ரசிகர்கள் அவரை கண்ணம்மாவாக ஏற்றுக்கொள்வதில் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், பாரதி கண்ணம்மா சீரியல் எதிர்பாராத திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களை சந்தித்து எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. சீரியலில் பாரதி விவாகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இதுவரை பிரிந்து இருந்த பாரதியும் கண்ணம்மாவும் 6 மாதங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனால், பாரதியும் கண்ணம்மாவுடன் வீட்டுக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீரியலில் வில்லி வெண்பா சிறைக்கு சென்றுள்ளார். ஆனால், வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஃபரினா ஆசாத்துக்கு குழந்தை பிறந்துள்ளதால் சில எபிசோடுகளில் அவரும் இடம் பெறவில்லை.

இதனிடையே, பாரதி கண்ணம்மா சீரியலின் கதையின் போக்கு சீரியல் முடிவை நோக்கி செல்வதாகவே உணரவைத்துள்ளது. இந்த நிலையில்தான், பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் பிரசாத், தனது கெட்டப்பை மாற்றி ஒரு ஹோட்டல் முன்பு நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள், கெட்டப்பை மாற்றிவிட்டதால் சீரியல் முடிஞ்சு போச்சா என்று கேட்டு வருகின்றனர்.

அருண் பிரசாத், பாரதி கண்ணம்மா சீரியலில் தாடியுடன் இருப்பார். ஆனால், இந்த வீடியோவில், அருண் தாடி மீசையை ஒட்ட ட்ரிம் செய்து கெட்டப்பை மாற்றியுள்ளார். ஷிம்லா சென்றுள்ள அருண் அங்கே ஒரு ஹோட்டலின் முன்பு ‘யாக்கைத் திரி’ என்ற பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் அருண் குறிப்பிடுகையில், “நீண்ட நாட்களுக்கு பிறகு நான் நானாக இருக்கிறேன். பாரதியை மறந்து இப்போது அருணாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அருண் கெட்டப்பை மாற்றியுள்ளதால் ரசிகர்கள் பலரும் பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்துவிட்டதா என்று அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர், “அங்க போய் டிஎண்ஏ டெஸ்ட் எடுக்காமல் இங்க உனக்கு டான்ஸ் கேக்குதா ப்ரோ…” என்று ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைகிறதா என்பது குறித்து சீரியல் தயாரிப்புக் குழுவினர் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலையும் தெரிவிக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma serial going to end barathi character arun change his get up

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express