scorecardresearch

Barathi Kannamma: அப்பா யாரு? அழுது வெடிக்கும் லட்சுமி; கண்ணம்மா முடிவு என்ன?

லட்சுமி, தனது அம்மா கண்ணம்மாவிடம், என் அப்பா யாரு, அவர் ஏன் உன்னையும் என்னையும் பார்க்க வரவே மாட்டேங்கிறாரு” என்று கேட்டு வெடித்து அழுகிறாள். இதைக் கேட்டு கண்ணம்மா உறுதியான முடிவெடுக்கிறாள்.

Barathi Kannamma serial, Lakshmi asks who is her father, kannamma bold answer, vijay tv, பாரதி கண்ணம்மா சீரியல், அப்பா யாரு அழுது வெடிக்கும் லட்சுமி, கண்ணம்மா முடிவு என்ன, barathi, kannamma, roshni haripriyan, tamil news, tamil serial news

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டி.ஆர்பி.யில் டாப்பில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலின் லேட்டஸ்ட் புரமோ வீடியோவில், கண்ணம்மாவின் மகள் லட்சுமி, என் அப்பா யாரு என்று அழுது வெடிக்கிறாள். மகளின் கேள்வியைத் தொடர்ந்து, கண்ணம்மா ஒரு உறுதியான முடிவெடுக்கிறாள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி-யிலும் பாரதி கண்ணம்மா சீரியல் டாப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரோஷினி ஹரிபிரியன் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாரதி கண்ணம்மா சீரியலில், ஓரளவு படித்த, நல்ல குணமுள்ள கண்ணம்மா, டாக்டர் பாரதியை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், பாரதியின் தோழி வெண்பா, பாரதியை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதால் சதி செய்து இருவரையும் பிரிக்கிறாள். கண்ணம்மா மீது சந்தேகப்படும் பாரதி அவளை விட்டு பிரிகிறான். நிறை மாத கர்ப்பிணியாக வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கிறது. அதில் ஒரு குழந்தையை பாரதியின் அம்மாவும் கண்ணம்மாவின் மாமியாருமான சௌந்தர்யா எடுத்துச் சென்று அந்த குழந்தைக்கு ஹேமா என்று பெயர் வைத்து வளர்க்கிறாள். பாரதியும் ஹேமாவை தனது மகளாக நினைத்து வளர்க்கிறான்.

கண்ணம்மா மற்றொரு குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைத்து தனியாக வளர்க்கிறாள். 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஹேமாவும் லட்சுமி ஒரே பள்ளியில் படிப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். ஆனால், கண்ணம்மா தனக்கு ஒரு குழந்தை மட்டுமே பிறந்தது என்று நினைத்து வந்த நிலையில், அண்மையில்தான் தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்றும் அந்த குழந்தை ஹேமா என்பதையும் தெரிந்துகொள்கிறாள். கண்ணம்மாவிடம் லட்சுமி அடிக்கடி தனது அப்பா யார் என்று கேள்வி கேட்டு வருகிறாள். அப்போதெல்லாம் அவர் வெளிநாட்டில் இருப்பதாக பொய் சொல்லி வருகிறாள்.

இந்த நிலையில்தான், லட்சுமி, தனது அம்மா கண்ணம்மாவிடம், என் அப்பா யாரு, அவர் ஏன் உன்னையும் என்னையும் பார்க்க வரவே மாட்டேங்கிறாரு” என்று கேட்டு வெடித்து அழுகிறாள். இதைக் கேட்டு கண்ணம்மா உறுதியான முடிவெடுக்கும் இந்த வார எபிசோடு புரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், லட்சுமி “என் அப்பா யாரு, ஏன் உன்னையும் என்னையும் பார்க்க வரவே மாட்டேங்கிறாரு” என்று கேட்டு அழுது வெடிக்கிறாள்.

அதற்கு கண்ணம்மா, “என்னைப் பிடிக்கலைணு சொல்லி உன் அப்பா பிரிஞ்சி போயிட்டார் லட்சுமி” என்று சொல்லி அழுகிறாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் லட்சுமி, “அப்படினா நாம இனிமேல் வாழ்க்கை ஃபுல்லா அப்பா இல்லாமதா இருப்பமா, நான் அவர்கூட சேரவே முடியாதா?” என்று தழுதழுத்த குரலில் கேட்கிறாள்.

அதற்கு கண்ணம்மா, “நீ எதைப் பத்தியும் கவலைப்படாத, உன் அப்பாவோட நான் சேர்த்துவைக்கிறேன்.” என்று கூறுகிறார்.

ஏற்கெனவே, பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்வதற்கு பெரும் தடையாக இருந்த வெண்பா சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது கண்ணம்மா தனது மகள் லட்சுமியை உன் அப்பாவுடன் சேர்த்து வைக்கிறேன் என்று கூறி இருப்பது பாரதி கண்ணம்மா சீரியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Barathi kannamma serial lakshmi asks who is her father kannamma bold answer