மற்ற மொழிகளில் பாரதி கண்ணம்மா சீரியல்… நடிகர் நடிகைகள் யார் தெரியுமா?

மிகப் பெரிய வெற்றி பெறுகிற திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெற்றி பெறுகிற சீரியல்களும் ரீமேக் செய்யும் போக்கு வளர்ந்து வருகிறது. அந்த வகையில், பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கிலும் கன்னடத்திலும் ரீமேக் ஆகி வருகிறது.

barathi kannamma serial, barathi kannamma remake of kannada muddulakshmi serial, malayalam serial karuthamuthu, பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி கண்ணம்மா சீரியல் ரீமேக், தெலுங்கு, கார்த்திகை தீபம், கருத்தமுத்து, மலையாளம் சீரியல், முத்துலட்சுமி கன்னடா சீரியல், ரோஷ்ணி ஹரிபிரியன், சரித் பாலண்ணா, அருண் பிரசாத், telugu serial karthika deepam, actors name, barathi kannamma roshni haripriyan, arun prasad, venba, premi viswanath, kishore sathya, charith balanna

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிநடைபோட்டு வருகிறது.

பணக்கார குடும்பம் அதில் டாக்டரான பாரதிக்கு அதிகம் படிக்காத ஆனால், அறிவான, அன்பான கண்ணம்மா திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், பாரதி மீது ஆசைப்படும் அவனுடைய சிறுவயது தோழி வெண்பா சதி செய்து பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்கிறாள். கண்ணம்மா மீது சந்தேகம் அடைந்த பாரதி அவள் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும்போது வீட்டை விட்டு விரட்டுகிறான். கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. ஆனால், கண்ணம்மாவுக்கு ஒரு குழந்தை மட்டுமே பிறந்ததாக சொல்லப்படுகிறது. மற்றொரு குழந்தையை கண்ணம்மா மீது அன்பு கொண்ட அவளுடைய மாமியார் சௌந்தர்யா தூக்கிச் சென்று ஹேமா என்று பெயர் வைத்து வளர்க்கிறார். கண்ணம்மா தனது மகளுக்கு லட்சுமி என்று பெயர் வைத்து வளர்க்கிறார். பாரதியும் தனது மகள் என்று தெரியாமல் ஹேமாவிடம் தந்தையாக அன்பு காட்டுகிறான். பாரதி கண்ணம்மா சீரியல் இப்படி நிறைய சுவாரஸ்யங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் பிப்ரவரி 25, 2019 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியல் மலையாளத்தில் ‘கருத்தமுத்து’ என்ற டிவி சீரியலின் ரீமேக் ஆகும். பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் அறிமுக நடிகை ரோஷ்னி ஹரிபிரியன் நடித்து வருகிறார். இந்த சீரியல் முதலில் சுமராக இருந்தாலும் கண்ணம்மா நிறைமாத கர்ப்பினியாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டப்போது, அவள் எங்கே செல்வது என்று தெரியாமல் பல எபிசோடுகள் நடந்துகொண்டே இருந்தாள். இதைப் பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் கண்ணம்மா நடந்து நடந்து நிலாவுக்கே சென்று விட்டாள்; சகாரா பாலைவனத்துக்கே சென்று விட்டால் என்று மீம்ஸ்களை போட்டு பரப்பினார்கள். இதனால், பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பியில் எகிறியது. டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இடம் பெற்றது.

மிகப் பெரிய வெற்றி பெறுகிற திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெற்றி பெறுகிற சீரியல்களும் ரீமேக் செய்யும் போக்கு வளர்ந்து வருகிறது. அந்த வகையில், பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கிலும் கன்னடத்திலும் ரீமேக் ஆகி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கில் கார்த்திகை தீபம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல, கன்னடத்தில் முத்துலட்சுமி என்றும் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. தெலுங்கு ரீமேக் கார்த்திகை தீபம் பாரதி கதாபாத்திரத்தில் நடிகர் நிருபம் நடிக்கிறார். கண்ணம்மாவாக பிரிமி விஸ்வானந்த் நடிக்கிறார்.

பாரதி கண்ணம்மாவின் மலையாளம் மூலமான கருத்தமுத்து சீரியலில் பிரேமி விஸ்வநாத் ரேணு சௌந்தர் கார்த்திகா கதாபாத்திரத்தில் நடித்தார். கார்த்திகா கதாபாத்திரம்தான் தமிழில் கண்ணம்மா கதாபாத்திரம். பாரதி கதாபாத்திரத்தில் கிஷோர் சத்யா நடித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா கன்னடா ரீமேக்கில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் அஸ்வினியும் பாரதி கதாபாத்திரத்தில் சரித் பாலண்ணாவு நடிகிறார்கள். ஒரு எளிய பெண் எப்படி வாழ்க்கையில் போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்கிறாள் என்பதுதான் இந்த சீரியலின் கதை என்று எளிதாக சொல்லிவிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma serial remake of kannada telugu malaiyalam serial actors name

Next Story
Vijay TV Serial; கண்ணம்மாவை விட்டு பிரிய மறுக்கும் ஹேமா… என்ன செய்யப்போகிறான் பாரதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express