scorecardresearch

Barathi Kannamma: வெண்பாவை துப்பாக்கியால் சுடும் சௌந்தர்யா… அடுத்து இதுதான் நடக்கப் போகிறதா?

யாரும் எதிர்பாராத விதமாக ஒரு ட்விஸ்ட்டாக சௌந்தர்யா வில்லி வெண்பாவை துப்பாக்கியால் சுடும் புரமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Barathi Kannamma Serial, barathi kannamma, vijay tv, Soundarya shoots Venba, barathi kannamma latest promo, barathi kannamma thrilling twist, பாரதி கண்ணம்மா சீரியல், வெண்பாவை துப்பாக்கியால் சுடும் சௌந்தர்யா, vijay tv barahthi kannamma, tamil tv serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு ட்விஸ்ட்டாக சௌந்தர்யா வில்லி வெண்பாவை துப்பாக்கியால் சுடும் புரமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் வெற்றி நடைபெற்று வருகிறது. இடையில் சில வாரங்கள் தொய்வடைந்த பாரதி கண்ணம்மா சீரியல் மீண்டும் பரபரப்பான காட்சிகளுடன் எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் கதை நகர்த்தப்பட்டு மீண்டும் டி.ஆர்.பி-யில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

வில்லி வெண்பாவின் சதியால் கணவன் மனைவியாக இருந்த பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள். கண்ணம்மா தனக்கு பிறந்த 2வது குழந்தை எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் அழுது புலம்புகிறாள்.

வெண்பா, கண்ணம்மாவிடம் உன்னுடைய 2வது குழந்தை எங்கே இருக்கிறாள் என தெரியும். உன்னுடைய 2வது குழந்தை வேண்டும் என்றால் பாரதியை விவாகரத்து செய்வதற்கான டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடு என்கிறாள். கண்ணம்மா டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுவதற்கு முன்பு கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா அந்த 2வது குழந்தை ஹேமாதான் என்று சொல்லி அவளை தடுக்கிறாள். பிறகு, கண்ணம்மாவின் 2வது குழந்தை பிச்சை எடுப்பதாக கூறி மிரட்டியது வெண்பாதான் என்பதை அறிந்துகொண்ட சௌந்தர்யா கடும் கோபமடைகிறார்.

இந்த நிலையில்தான், சௌந்தர்யா, தனது மகன் பாரதியையும் மருமகள் கண்ணம்மாவையும் சேர்ந்து வாழமுடியாமல் தடுத்து வரும் வெண்பாவை துப்பாக்கியால் சுடும் புரமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யா துப்பாக்கியால் சுட வெண்பா காயமடைந்து மயங்கி விழுகிறாள். அடுத்த சில நொடிகளிலேயே வெண்பா கண் முழிந்து எழுந்து துப்பாக்கி எடுத்து சுடுகிறாள். இந்த புரமோ ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஏற்கெனவே, பாரதி கண்ணம்மா சீரியலின் ரசிகர்கள் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேர்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சௌந்தர்யா, வெண்பாவை துப்பாக்கியால் சுடுவதால் விரைவில் கதை முடியும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால், இது போல பல ட்விஸ்ட் காட்சிகள் ஏற்கெனவே பாரதி கண்ணம்மா சீரியலில் இடம்பெற்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஆனால், அடுத்த எபிசோடிலேயே அது கனவு காட்சியாக சித்தரிக்கப்பட்டு கதை நகரும். அதனால், சௌந்தர்யா, வெண்பாவை துப்பாக்கியால் சுடும் காட்சி நிஜமாவே ட்விஸ்ட்டா இல்லை கனவு காட்சியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Barathi kannamma serial soundarya shoots venba thrilling twist