மறுபடியும் போட்டுட்டா கட்ட… தூக்குங்கடா 'பேக்'க… கண்ணம்மா கிளம்பிட்டாங்களா..?

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மீண்டும் தலையில் கட்ட போட்டுட்டா என்ன நடக்கப் போகிறதோ? இந்த சீரியல் சமூக ஊடகங்களில் மீம்களால் வைரலாகி மீண்டும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மீண்டும் தலையில் கட்ட போட்டுட்டா என்ன நடக்கப் போகிறதோ? இந்த சீரியல் சமூக ஊடகங்களில் மீம்களால் வைரலாகி மீண்டும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
barathi kannamma, barathi kannamma serial photo, venba releases photo, bandage on kannammas head, பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல், தலையில் கட்டு, வெண்பா, பரீனா ஆசாத், ரோஷ்னி ஹரிபிரியன், barahti kannamma memes, barahti kannamma viral, barahti kannamma serial news, venba, kannamma, farina azad, roshni haripriyan

Barathi Kannamma: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆன அளவுக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் வேறு எந்த சீரியலாவது ட்ரெண்டிங்க் ஆகியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

Advertisment

மலையாளத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்ற கருத்தமுத்து என்ற சீரியலின் ரீ மேக்தான் பாரதி கண்ணம்மா சீரியல். ஒரு வசதியான குடும்பத்தில் டாக்டருக்கு படித்த முன்கோபியான பாரதியை வசதியில்லாத அதிகம் படிக்காத சதாரண பெண் கண்ணம்மா திருமணம் செய்துகொள்கிறாள். பாரதியின் மீது ஆசைப்படும் அவனுடைய ஃபிரெண்ட் டாக்டர் வெண்பா அவனை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். அதனால், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே பிரச்னைகளை உருவாக்கி அவர்களைப் பிரிக்கிறாள். பாரதி தனது மனைவி கண்ணம்மாவின் நடத்தை மீது சந்தேகம் அடைந்து நிறைமாத கர்ப்பினியான அவளை வீட்டை விட்டு துறத்துகிறான். அப்போது, ஏற்பட்ட காயத்துக்கு தலையில் கட்டுப்போட்டுக்கொண்டு கையில் ஒரு பையுடன் கண்ணம்மா துணிச்சலான பெண்ணாக நடக்கத் தொடங்குகிறாள். அப்படி பல வாரம் நடந்தாள். துணிச்சலான வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணாக மாறுகிறாள்.

அதுவரை மிகவும் சாதாரணமாக போய்க்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் நெட்டிசன்களின் மீம்ஸ்களால் அந்த சீரியல் மிகவும் பிரபலமானது. கண்ணம்மா நடந்து நடந்து நிலாவுக்கே போய்விட்டாள், கண்ணம்மா நடந்து நடந்து செவ்வாய் கிரகத்துக்கே போய்விட்டாள், கண்ணம்மா நடந்து நடந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பார்க்க போய்விட்டாள் என்று சமூக ஊடகங்களில் பாரதி கண்ணம்மா சீரியல் மீம்ஸ்களால் நிரம்பி வழிந்தது. தமிழ் தொலைகாட்சி சீரியல்களில் டாப் 5 இடத்தில் இடம்பிடித்தது.

தற்போது, இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்றை கண்ணம்மாவுக்கே தெரியாமல் அவளுடைய மாமியார் சௌந்தர்யா எடுத்துச் சென்று ஹேமா என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார். ஆனால், கண்ணம்மா தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்ததாக நினைத்து லட்சுமியை வளர்த்து வருகிறாள். ஹேமா, லட்சுமி, கண்ணம்மா நட்புடன் பழகிவர இதைத் தெரிந்துகொண்ட பாரதி ஹேமாவை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிடுகிறான். கண்ணம்மா, ஹேமா அதே பள்ளியில் படிக்க வேண்டும் என்று கூறுகிறாள். வெண்பா இரக்கமில்லாத வில்லியாக தொடர்ந்து செயல்படுகிறாள். வெண்பா கதாபாத்திரத்தில் பரீணா கதி கலங்க வைத்து வருகிறார்.

Advertisment
Advertisements

இந்த சூழலில்தான், கண்ணம்மா ஹேமாவை கடத்திவிட்டதாக பாரதி போலீசில் புகார் அளிக்கிறான். போலீஸ் அவளைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது. சௌந்தர்யா, கண்ணம்மாவை ஜாமீனில் எடுக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியல் மீண்டும் பரபரப்பான திருப்பங்கள்டன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

publive-image

இந்த நிலையில்தான், வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா, பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு காட்சியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், கண்ணம்மா மருத்துவமனையில் இருந்து தலையில் கட்டு போட்டுக்கொண்டு தனது மாமியார் சௌந்தர்யாவுடன் வெளியே வருகிறார். மேலும், பரீனா அந்த போட்டோவில், “கண்ணம்மா மறுபடியும் போட்டுட்டா டா கட்ட தூக்குங்கடா அந்த பேக்க ஆர்வத்தை தூண்டும் எபிசோடுகளுக்காக காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கண்ணம்மா தலையில் கட்டு போட்டுக்கொண்டு நிறைமாத கர்ப்பினியாக நடந்து சென்றபோதுதான் பாரதி கண்ணம்மா சீரியல் வைரல் ஆனது. அந்த வகையில் இப்போது கண்ணம்மா மீண்டும் தலையில் கட்டு போட்டுக்கொண்டு இருக்கிறாள். அதனால், பாரதி கண்ணம்மா சீரியல் மீண்டும் சமூக ஊடகங்களில் மீம்களால் வைரலாகி ஹிட் அடிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Bharathi Kannamma Serial Barathi Kannamma Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: