Barathi Kannamma Serial:விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், பாரதிக்கு சமையல் அம்மா கண்ணம்மாதான் என்பது தெரியவந்ததையடுத்து, பாரதி ஹேமாவை கண்ணம்மா வேலை செய்யும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றப் போகிறேன் என்று சொல்கிறான். ஆனால், ஹேமா தனக்கு அந்த பள்ளிதான் பிடித்திருகிறது. அங்கேதான் என்று நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்கிறார்கள். அந்த பள்ளியில்தான் படிப்பேன் என்று அடம் பிடிக்கிறாள். “உங்களுக்கு பிடிக்காதது ஸ்கூல் இல்லை டாடி. உங்களுக்கு புடிக்காதது சமையல் அம்மதான், அவங்க பேரை சொன்னாலே ஏன் கத்துறீங்க… அவங்க என்ன தப்பு செஞ்சாங்க… ஏன் அவங்க மேல இவ்ளோ கோப்படறீங்க, அங்கள எனக்கு புடிச்சிருக்கு, அவங்களும் எங்கிட்ட ஒரு அம்மா மாதிரிதான் பழகறாங்க… ஏன் அவங்க மேல இவ்ளோ கோபம்” என்று ஹேமா சொல்கிறாள்.
இதைக் கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். பாரதி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், கோபத்தில் கொந்தளித்து நிற்கிறான்.
பாரதி பேசிக்கொண்டிருக்கும்போதே, அவனுடைய தம்பி அகில், “ஹேமா டைம் ஆச்சு ஸ்கூலுக்கு கிளம்பலாம்” என்று கூறி எழுந்திருக்கிறான். இதனால், கோபடமடையும் பாரதி, “டேய்! உட்க்கார்ரா.. நீ பாட்டுக்கு கூட்டிட்டு இருக்க… அவள ஸ்கூல்ல கொண்டு போய் விடறதுக்கு எனக்கு தெரியாதா? இத்தனை நாளா இதெல்லாம் யார் பார்த்துகிட்டு இருந்தா,” என்று கத்துகிறான்.
அப்போது பாரதியின் அப்பா வேணு, “இத பாரு பாரதி உன் பிடிவாதத்தால உன் மகளோட படிப்பை வீணாக்கிடாத” என்று சொல்கிறார்.
அதற்கு பாரதி, “பரவால்லபா ஸ்கூலயே மாத்த போறேன். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தானே… நான் பாத்துக்குறேன்… இவளை ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போயி ஒரு இன்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட் ஸ்கூல்ல படிக்க வைப்பேன்” என்று கூறுகிறான். இதைக்கேட்டு வீட்டில் அனைவரும் கோபப்படுகிறார்கள்.
இதைக்கேட்ட வேணு, “சரிடா நீ முடிவு பண்ணிட்ட நாங்க யாரு கேட்டாலும் நீ மாறப்போறதில்லை, ஆனால், அதுக்கு முன்னாடி உன் அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு உனக்கு கொஞ்சம் கூட தோணலையா?” என்று கேட்கிறார்.
அதற்கு பாரதி, “நானே அம்மா கிட்ட சொல்றேன்ப்பா அம்மானா எனக்கென்ன பயமா, எங்க இருக்காங்க அம்மா” என்று கூறிவிட்டு “அம்மா!அம்மா!” என்று கூப்பிடுகிறான்.
அப்போது வேணு, “டேய்! நீ எவ்வளவு கத்தி கூச்சல் போட்டாலும் உங்க அம்மா வரமாட்டாங்க…” என்று கூறுகிறார்.
“இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் பாரதி ஏன் அம்மா எங்கே போயிருக்காங்க” என்று கேட்கிறான். அதற்கு அஞ்சலி அம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி இருக்காங்க என்று கூறுகிறாள்.
இதையடுத்து, வேணு, நேற்று நடந்ததைக் கூறுகிறார். பர்த்டே ஃபங்ஷன் முடிந்ததும் சௌந்தர்யா கோயிலுக்கு போனதையும் அங்கே அவள் மயங்கி விழுந்தையும் யாரோ மருத்துவமனையில் சேர்த்ததையும் கூறுகிறார். வேணு சொல்வதைக் கேட்ட பாரதி இதை ஏன் எங்கிட்ட யாரும் சொல்ல என்று கேட்கிறான். அதற்கு வேணு, உங்கிட்ட சொல்ற நிலைமையில நீ இல்லை. நல்ல போதையில, இருந்த, ஹேமா சொல்ற மாதிரி சமையல் அம்மானு கத்திகிட்டு இருந்த என்று கூறுகிறார். இதைக்கேட்டு, பாரதி தவிக்கிறான். தொடர்ந்து பேசும் வேணு, இவ்வளவு நாள் உனக்கு அம்மாவ காணம்னு தோணுச்சா என்று கேட்க, பாரதி எந்த ஹாஸ்பிட்டல் என்று கேட்கிறான். அதற்கு அகில் ஜீ.வி. ஹாஸ்பிட்டல் என்று பதில் கூறுகிறான்.
உடனே பாரதி ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணி விசாரித்துவிட்டு, “அம்மாவுக்கு ஒன்னும் பெரிய பிரச்னை எல்லாம் இல்ல. அவங்க ஷாக்ல மயங்கி இருக்காங்க… சீக்கிரம் ரெக்கவர் ஆகிடுவாங்க… உடனே இதையெல்லாம் வச்சு என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளக்காதீங்க” என்று கூறுகிறான்.
வேணு, “உனக்கு குற்ற உணர்சினு ஒன்னு இருந்தா தானடா?” என்று கேள்வி கேட்கிறார். அகில், அப்பாவை அமைதிப்படுத்திவிட்டு ஹேமாவுக்கு பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டதைக் கூறுகிறான். பாரதியும் ஹேமா வா போகலாம் என்று அவளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறான்.
பாரதியும் ஹேமாவும் போன பிறகு, வேணு, “என்னடா இவன் ஸ்கூல மாத்துறேன். அது இதுன்னு சொல்றான்.” என்று அகிலிடம் கேட்கிறார். அகில் அதுதான் எனக்கும் தெரியல அவன் ஸ்கூலுக்கு போய் என்னென்ன கலாட்டா பண்ணப் போறானோ என்று கூறுகிறான். அனைவரும் கவலைப்படுகிறார்கள்.
அடுத்த காட்சியில், கண்ணம்மாவும் லட்சுமியும் ஆட்டோவில் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். லட்சுமி அம்மா கண்ணம்மாவிடம் லஞ்ச் பற்றி விசாரிக்கிறாள். அப்போது ஆட்டோக்காரர் குமார், நீ இன்னும் எத்தனை நாளைக்கு தனியா சமைக்கப்போற இன்னும் 2 - 3 ஸ்கூல் ஆர்டர் எடுத்து ஆள் வச்சு சமைக்கலாம் இல்லை என்று கேட்கிறான்.
ஆனால், கண்ணம்மா, “ஸ்கூலுக்கு சமையல் பண்ணி கொடுக்குறதை நிறுத்த போறேன்” என சொல்கிறாள். இதற்கு லட்சுமியும், குமாரும் வேலையை விட வேண்டாம் என்று கூறுகிறார்கள் ஆனால், இரும்பு பெண்மணி கண்ணம்மா அவள் முடிவில் உறுதியாக இருக்கிறாள்.
இதனிடையே, அகிலும், அஞ்சலியும் வீட்டில் நடந்த பிரச்சனைகள் பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது, அகில் “நம்ம சீக்கிரம் குழந்தையை பெத்து கொடுத்து, இந்த வீட்ல எல்லாரோட கவனத்தையும் மாத்துறோம்” என சொல்கிறான்.
அப்போது, அஞ்சலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட அவள் அகிலை உள்ளே அனுப்புகிறாள். “இந்த வாரத்தில் மூன்றாவது தடவையா நெஞ்சு வலிக்குது, என்னான்னு தெரியல, அகில் கிட்ட சொல்லக்கூடாது. டாக்டர் கிட்ட செக் பண்ணனும்” என்று அஞ்சலிமனதிற்குள் நினைத்து கொள்கிறாள்.
இதற்கிடையில், ஹேமாவை அழைத்து கொண்டு வரும் பாரதி, “எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க. என் பொண்ணு மூலமா என் வீட்டுக்கு வந்துடலாம்ன்னு அந்த கண்ணம்மா நினைக்கிறா. அது மட்டும் நடக்கக்கூடாது” என்று மனதிற்குள் யோசித்துக்கொண்டு வருகிறான்.
அடுத்த காட்சியில், பாரதி பிரின்சிபாலிடம், ஹேமாவிற்கு டிசி வாங்குவது பற்றி பேசி கொண்டிருக்கும் போது, கண்ணம்மா அங்கு வருகிறாள். அவள் பிரன்ஸிபாலிடம், “இனிமே நான் சமைச்சு தரலை, அதை சொல்றதுக்கு தான் இங்க வந்தேன்” என சொல்கிறாள்.
இதைக்கேட்ட பிரின்ஸிபால், “இவர் ஹேமாவுக்கு டிசி வாங்க போறேன்னு சொல்றாரு. நீங்க சமையலை நிறுத்த போறேன்னு சொல்றீங்க. ஒரே நேரத்துல ரெண்டு பேரும் இப்படி சொன்னா, நான் என்னா பண்றது” என கேட்கிறார்.
அப்போது, அவள் ஏன் ஹேமாவுக்கு டிசி வாங்கனும் என கண்ணம்மா கேட்கிறாள். அதற்கு பாரதி, “என் பொண்ணை நான் எங்க வேணும்னாலும் கூட்டிட்டு போவேன். அத கேட்க இவுங்க யாரு” என சத்தம் போடுகிறான்.
இதையடுத்து, கண்ணம்மா கிளம்புவதற்கு முன்பு, “ஹேமா நல்ல படிக்கிற பொண்ணு, அவளோட படிப்பை கெடுத்திட வேண்டாம் சார்” என பிரின்சிபாலிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.