ஆசையாக கிளம்பி நின்ற கண்ணமாவை வீட்டில் நிக்க வைத்த மாமியார்!

சவுந்தர்யா தினம் தினம் கண்ணமாவை திட்டாதே நாளே இல்லை.

By: Updated: August 29, 2019, 02:21:44 PM

Barathi Kannamma serial : சமீபத்தில் தொடங்கப்பட்ட புத்தம் புது சீரியலான பாரதி கண்ணமா தொடர் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்து போன சீரியலாக மாறியுள்ளது. காரணம், வெள்ளை,கறுப்பு என நிறவேற்றுமை காட்டி இரு பெண்களும் பிரித்து காட்டப்படும் அனைவரையும் சற்று சிந்திக்க வைக்கும் மைப்புள்ளி கொண்ட கதை என்பதால் தான்.

பாரதி மாமாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு தனது வாழ்க்கை அப்படியே மாறிவிடும் என நினைத்த கண்ணமாவிற்கு கிடைத்தது வெறும் விரக்தி மட்டும் தான். ஒருபக்கம் பாரதி, கண்ணமாவை ஆசையுடன் பார்த்துக் கொக்கொண்டாலும் இவர்களை சேர்ந்து வாழ விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் தங்கை அஞ்சலி. பாரதி மீது அஞ்சலிக்கு இருக்கும் காதல் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது. இதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் அப்பாவி பாரதி.

மறுப்பக்கம், பாரதியின் அம்மா சவுந்தர்யாவுக்கு கண்ணமாவை கண்டாலே சுத்தமாக பிடிக்கவில்லை. காரணம், கறுப்பு நிறம் மட்டும் தான். தனது மகனுக்காக வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொண்டது போல் நடித்தாலும் சவுந்தர்யா தினம் தினம் கண்ணமாவை திட்டாதே நாளே இல்லை.

இந்நிலையில் தான் அகிலன் – அஞ்சலி திருமண வேலைகள் பிஸியாக நடந்துக்கொண்டிருக்கிறது. தனது தங்கையின் கல்யாணத்திற்கு ஆசை ஆசையாக கிளம்பி இருக்கும் கண்ணமாவை பொய்யான காரணம் காட்டி வீட்டிலேயே கழட்டி விடுகிறார் மாமியார் சவுந்தர்யா.

இது தெரியாமல் பாரதியும் தனது தம்பியுடன் அஞ்சலி வீட்டுக்கு சென்று விடுகிறார். அங்கு போய் தான் பாரதிக்கு தெரிய வருகிறது கண்ணமா வரவில்லை என்று. அதிலும் கண்ணமாவின் அப்பா, பாரதியிடம் சென்று மனம் உருகி பேசுகிறார். இதன் பின்பு தான் கண்ணமாவை அழைத்து வர புறப்படுகிறார் பாரதி.

கறுப்பு என்ற நிறத்தை மட்டுமே காரணம் காட்டி, சவுந்தர்யா, கண்ணமாவை இப்படி அசிங்கப்படுத்தியது பார்ப்பவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Barathi kannamma serial vijay television barathi kannamma

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X