போலீஸ் பிடியில் வெண்பா? பாரதி கண்ணம்மா அடுத்த ட்விஸ்ட்

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கிற ஃபரீனா ஆசாத், அடுத்த ட்விஸ்ட் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி சீரியலாக ரசிகர்களைக் கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் தினம் ஒரு ட்விஸ்ட் தினம் ஒரு எதிர்பார்ப்பு என்று ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கிற ஃபரீனா ஆசாத், அடுத்த ட்விஸ்ட் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலின் கதை இதுதான், ஓரளவு படித்த நல்ல குணமுள்ள கண்ணம்மா வசதியான வீட்டு பையன் டாக்டர் பாரதியை திருமணம் செய்துகொள்கிறாள். முதலில் மாமியார் உள்பட பலரும் கண்ணம்மாவை வெறுத்தாலும் அவளுடைய நல்ல உள்ளத்தை புரிந்துகொண்டு அவளை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், கணவன் பாரதி தோழி வெண்பாவின் சதியால் மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு அவள் நிறைமாத கர்ப்பினியாக இருந்தபோது வீட்டை விட்டு விரட்டுகிறான். கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது. அதில், ஒரு பெண் குழந்தையை பாரதியின் அம்மா சௌந்தர்யா கண்ணம்மாவுக்கே தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்து ஹேமா என்று பெயர் வைத்து வளர்க்கிறார். கண்ணம்மா தனக்கு ஒரு குழந்தைதான் பிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் தனது மகளுக்கு சௌந்தர்ய லட்சுமி என்று பெயர் வைத்து வளர்க்கிறாள். பாரதி அந்த குழந்தை தனது மகள் என்று தெரியாமல் குழந்தையை மகளாக நினைத்து பாசமாக வளர்க்கிறான்.

ஹேமாவும் லட்சுமியும் ஒரே பள்ளியில் படிப்பதால் அங்கே சமையல் வேலை செய்யும் கண்ணம்மா ஹேமாவுடன் நெருங்கி பழகுகிறாள். பாரதியின் வீட்டில் உள்ளவர்களும் பாரதிக்கு தெரியாமல் அனுமதிக்கிறார்கள். இந்த சூழலில்தான், பாரதிக்கு ஹேமா சொல்லும் சமையல் அம்மா யார் என்பது தெரியவருகிறது. அதனால், பாரதி தனது மகள் ஹேமாவை தன்னிடம் இருந்து கண்ணம்மா பிரிக்க முயற்சி செய்கிறாள் என்று நினைத்து ஹேமா வை அமெரிக்கா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறான்.

இதனிடையே, வில்லி வெண்பா பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எல்லா சதிகளையும் செய்கிறாள். ஹேமாவையும் கடத்துகிறாள். அப்போதும், ஹேமாவை கண்ணம்மாதான் மீட்கிறாள்.

ஆனாலும், தனது முடிவில் உறுதியாக இருக்கும் பாரதி மகள் ஹேமாவை அமெரிக்கா அழைத்துச் செல்ல தயாராகிறான். பாரதியின் அம்மா சௌந்தர்யா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காத பாரதி அமெரிக்கா புறப்படுகிறான். ஹேமா காய்ச்சலில் இருப்பதைப் பொருட்படுத்தாமல் ஏர்போர்ட்டுக்கு கிளம்புகிறான். ஏர்போர்ட்டுக்கு செல்லும் வழியில், காரில் சென்று கொண்டிருக்கும்போது ஹேமாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு ஹேமாவுக்கு வலிப்பு ஏற்படுகிறது. அப்போது, உடன் செல்லும் பாரதியின் ஃபிரெண்ட் பிரியா, ஹேமாவின் நாடித் துடிப்பு வேகமாக குறைந்து வருவதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறுகிறார்.

இதனால், பாரதி பதற்றம் அடைகிறான். அப்போது கார் பின்னால் வந்த பாரதியின் அம்மா சௌந்தர்யா, ஹேமாவின் நிலையைப் பார்த்து பாரதி மீது கடுமையாக கோபமடைகிறார்.

என் பேத்திக்கு எதாவது ஒன்னு ஆச்சுன்னா? உன்ன என்ன செய்கிறேன் என பார் என தனது மகன் பாரதியை எச்சரிக்கிறார். மருத்துவமனையில் ஹேமாவுக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐசியூவில் இருந்து வெளியே வரும் மருத்துவர் பிரியா, ஹேமாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது என பாரதியிடம் கூறுகிறார். அதற்கு பாரதி என்ன செய்ய வேண்டும் என கேட்கிறான். அதற்கு டாக்டர் பிரியா, அந்த ஒரே வழி, ‘சமையல் அம்மாவை அழைத்து வரவேண்டும்’ என கூறுகிறார்.

இதைக்கேட்டு பாரதி தனது தனது அம்மா சௌந்தர்யாவைப் பார்க்கிறான். ஆனால், சௌந்தர்யா அதற்கு மறுப்பு தெரிவித்து, நீயே போய் அழைத்து வா என சொல்கிறார். இதனால், வேறு வழி இல்லாமல் பாரதி கண்ணம்மாவை அழைத்து வர நேரில் செல்கிறான். இப்படி ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் என விறுவிறுப்பான கதைப் பின்னலில் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.

இந்த சூழலில்தான், பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கிற ஃபரீனா ஆசாத் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று சூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், போலீஸ் வாகனம் பின்னாடி இருப்பதால், வெண்பா போலீஸிடம் சிக்கிக்கொண்டாரா அல்லது வேறு ஏதாவது ட்விஸ்ட் வைத்திருக்கிறார்களா? ரசிகர்கள் தங்கள் கற்பனை குதிரைகளைத் தட்டிவிட்டு யூகித்து வருகிறார்கள்.

ஹேமாவைக் காப்பாற்றுவதற்காக பாரதி, கண்ணம்மாவை அழைத்து வர நேரில் செல்வதால் இருவரும் சந்திக்கும்போது என்ன நடக்கும்? வில்லி வெண்பா என்ன சதி செய்யப் போகிறாளோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma serials next twist venba release video

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com