New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/666-5.jpg)
Barathi Kannamma
பாரதிக்கு மனைவியான கடுப்பில் அக்கா கண்ணம்மாவிற்கு வைக்கப்படும் விஷமா?
Barathi Kannamma
Barathi Kannamma: விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய மருமகளாக காலெடி எடுத்து வைத்திருக்கும் அஞ்சலி ஆட்டம் தான் இனி.
அஞ்சலிக்கு, கண்ணம்மாவை பிடிக்காது என்பது கண்ணம்மா உட்பட குடும்பத்தார் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் தனது திடீர் திருமணத்தினால் அஞ்சலி கல்யாணம் நின்றுப்போய்விட்டதாக குற்ற உணர்ச்சியில் பொங்கிய கண்ணம்மா பாரதி உதவியால் அஞ்சலி- அகிலன் கல்யாணத்தை பாடுப்பட்டு நடத்தி வைக்கிறார்.
‼ ஒரு விசமே.. விசம் கலக்குகிறதே! ????
பாரதி கண்ணம்மா - இன்று இரவு 8:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/T0vNcr8yv1— Vijay Television (@vijaytelevision) September 13, 2019
தனது அக்காவின் நல்ல உள்ளத்தை புரிந்துக் கொள்ளாத அஞ்சலி, வீட்டுக்கு வந்த முதல் நாளே ஜூசில் விஷம் கலக்கிறார். அந்த ஜூஸ் யாருக்கு என்பது தான் இப்போதைய கேள்வி. பாரதிக்கு மனைவியான கடுப்பில் அக்கா கண்ணம்மாவிற்கு வைக்கப்படும் விஷமா? அல்லது அத்தை செளந்தர்யாவுக்கு வைக்கும் விஷமா? இல்லை புது கணவர் அகிலனுக்கு வைக்கப்படும் விஷமா என்பது இன்று தெரிந்து விடும்.
kanmani today:
பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் கண்ணன் - செளந்தர்யா திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், திருமண மண்டபத்தில் இருக்கும் ஆகாஷ் திடீரென்று காணாமல் போகிறார்.
ஆகாஷை கடத்தியது கிருஷ்ணவேனி அத்தை பிள்ளைகள் தான் என்பது எல்லாருக்கும் தெரியும். கண்ணனை பாலில் தூக்க மருந்து கொடுத்து கண்ணனை மயக்கமடைய வைத்து கடத்தவும் அவர்கள் பிளான் செய்தனர். ஆனால் கண்ணன் தப்பித்து விட, ஆகாஷ் மாட்டிக் கொண்டார். ஆகாஷ் வந்தால் தான் திருமணம் என்று கண்ணன் ஒருபக்கம் மண்டபம் முழுவதும் தேடிகிறார். இந்த முறையாவது இவர்கள் திருமணம் நடக்குமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.