Barathi Kannamma Serial: பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் நடைபெறும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், ஹேமாவை கண்ணம்மா கடத்தியதாக பாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் கண்ணம்மாவை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில் கண்ணம்மா அச்சத்துடன் நிற்கிறாள். சுற்றி நிற்கும் பெண் போலீஸார், குழந்தையை எது கடத்துன குழந்தையை கடத்தி எங்கே வச்சிருக்க, இல்ல குழந்தையை கடத்தி வித்துட்டிடியா சொல்லுடி என்று மிரட்டலாக கேட்கிறார்கள். அதற்கு கண்ணம்மா குழந்தையை நான் கடத்த வில்லை. அவ சின்ன குழந்தை எப்படி எங்க இருக்கிறாளோ? முதலில் குழந்தையை கண்டுபிடியுங்கள் என்று கூறுகிறாள். ஆனால், ஒரு போலீஸ் நீ தான் குழந்தையை கடத்தினன்னு உன் ஹஸ்பண்ட்தான் கம்ப்ளெய்ண்ட் குடுத்திருக்காரு என்று கூற இதைக் கேட்டு கண்ணம்மா ஷாக் ஆகிறாள்.
ஒரு போலீஸ் அவர் தான் உன்னை விட்டு பிரிந்துவிட்டார் இல்லை பிறகு ஏன் அவர் குழந்தையை கடத்தி டிஸ்டர்ப் பண்ற, குழந்தையை கடத்தி காசு சம்பாதிக்க பார்க்கிறியா, குழந்தை எங்க சொல்லுடி என்று கேட்கிறாள். கண்ணம்மா என்ன சொல்வதென்றே தெரியாமல் அச்சத்துடன் நிற்கிறாள். அப்போது ஒரு போலீஸ் இப்போ உண்மையை சொல்லப் போறீயா இல்லையா என்று அடிக்கை கையை ஓங்குகிறார்.
அந்த நேரம் பார்த்து, கண்ணம்மா நிறுத்துங்க என்று கூறி உள்ளே போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே வருகிறார். போலீசார் நீங்க யார் என்று கேட்க, நான் தான் சௌந்தர்யா குரூப் ஆஃப் கம்பனிகளின் எம்.டி என்று சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அப்போ நீங்க கண்ணம்மாவோ மாமியாரா என்று போலீஸ் கேட்க ஆமாம் என்று சௌந்தர்யா கூறுகிறார். கண்ணம்மா தனது மாமியாரை நெகிழ்ச்சியாகப் பார்க்கிறார்.
இதையடுத்து, போலீசாரிடம் தனது மருமகளுக்கும் மகனுக்கும் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் அதான் இப்படி ஆகிடுச்சு என்று கூறுகிறார். ஆனால், அவர் டாக்டருக்கு படிச்சு இருக்காரு என்று போலீசார் கூறுகிறார்கள். அதற்கு சௌந்தர்யா, படிச்சங்க எல்லாம் தப்பு பண்ணாமாட்டங்களா என்ன, அவனுக்கு ஏன் தான் இப்படி புத்தி போகுதோ என்று கூறுகிறார். அதற்கு போலீஸ் நீங்க சொன்னாலும் நாங்க கண்ணம்மாவை அனுப்ப முடியாது. அதற்கு ஃபார்மலிட்டிஸ் இருக்கு… லீகலாத்தான் மூவ் பண்ண முடியும் என்று கூறுகிறார்கள். இதற்கு சௌந்தர்யா நானும் லீகலாத்தான் மூவ் பண்றேன். நான் என் மருமக கண்ணம்மா கூட கொஞ்ச நேரம் பேசலாமா என்று கேட்கிறார். அதற்கு போலீசாரும் அனுமதி அளிக்கிறார்கள்.
இதுவரைக்கும் அவன் இது ஒன்னைத்தான் செய்யாம இருந்தான். இப்போ உன்னை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டுவந்துட்டான். நான் பெத்த புள்ளைக்கு ஏந்தான் இப்படி புத்தி போகுதோ என்று வருத்தப்படுகிறாள். அதற்கு கண்ணம்மா, ஹேமா எங்கே இருக்கிறாள், சின்ன பொண்ணு, சாப்பிட்டாளோ இல்லையோ, எங்க இருக்கிறாளோ என்று கவலைப்படுகிறாள். இதைக் கேட்ட சௌந்தர்யா, பாரதி உன் மேல் பொய்யா போலீஸ் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டான்னு கோபத்தில் இருப்பன்னு நினைச்சேன். ஆனால், நீ ஹேமா காணாம போயிட்டானு கவலைப்படற என்று சௌந்தர்யா நெகிழ்ச்சியாக பேசுகிறாள். அதற்கு கண்ணம்மா, அந்த ஸ்கூல்ல ஹேமாதான் எங்கிட்ட சமையல் அம்மா சமையல் அம்மானு அன்பா பேசுவா, எனக்கும் அவள் மீது 10 மாசம் சுமந்து பெத்த பொண்ணு மாதிரி பாசம்… அவள் சமையல் அம்மானு கூப்பிட்டாலும் எனக்கு அம்மானு கூப்பிடுவதாக இருக்கும் என்று கூறுகிறாள்.
இதைக்கேட்டு சௌந்தர்யா இருக்காதா பின்ன, நீ பெத்த பொண்ணுதான் ஹேமா, அந்த உண்மையை இப்பவே சொல்லிடலாம்னு நினைக்கிறேன். ஆனால், இந்த பாரதியை நினைச்சாத்தான் பயமாக இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள்.
இதையடுத்து, கண்ணம்மாவை லீகலாக அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு போலீசாரிடமும் கண்ணம்மாவை தனது வக்கிலை வைத்து சட்டப்படி அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார். பிறகு, அங்கே இருக்கும் போலீஸிடம் கண்ணம்மா ஏதாவது கேட்டாள், வாங்கித் தரும்படி காசு கொடுத்துவிட்டு செல்கிறாள்.
அடுத்த காட்சியில், ஹேமா கட்டிப்போடப்பட்டு இருக்கிறாள். ஹேமா, பாரதி அப்பா என்னை எப்படியாவது இவங்ககிட்ட இருந்து காப்பாத்துங்க… இல்லைனா, சமையல் அம்மா நீங்களாவது வந்து என்னை காப்பாத்துங்க என்று கூறி அழுகிறாள். ஹேமாவின் அழுகையால் கோபம் அடையும் அவளைக் கடத்திய ரவுடிகள், அழாமல் இரு என்று எச்சரிக்கிறான். ஆனாலும் ஹேமா அழுதுகொண்டே இருக்கிறாள். ஒரு ரவுடி ஹேமாவுக்கு பழங்களை வாங்கி வந்து தருகிறான். அந்த நேரம் அந்த ரவுடிக்கும் வெண்பாவிடம் இருந்து போன் அழைப்பு வருகிறது. ஹேமாவை பத்திரமாக பாத்துக்கொள்ளுங்கள் என்றும் சாப்பிட ஏதாவது வாங்கித் தரும்படி கூறுகிறாள். மேலும் தான் சொல்லும் வரை ஹேமாவை அங்கேயே வைத்திருக்கும்படி கூறுகிறாள். மேலும், உங்களுக்கு இந்தி தெரியுமா என்று கேட்கிறாள். நான் சொல்லும்போது நார்த் இந்தியா செல்லும் ரயிலில் ஏறி ஒரு 10 மணி நேரம் போன பிறகு இறக்கிவிட்டு வந்து விடுங்கள் என்று கூறுகிறாள். ஆனால், ரவுடிகள் தமிழ்நாட்டையே தாண்டதவர்கள் என்பதை அவர்களின் பேச்சுகளில் வெளிப்படுத்துகிறார்கள். அதோடு, அவர்கள் நடவடிக்கை காமெடியாவும் இருக்கிறது.
அடுத்த காட்சியில், பாரதி வெண்பாவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறான். போலீஸ் ஸ்டேஷனில் பாரதி போலீஸிடம் அவர் என் குழந்தையை எங்க கடத்தி வச்சிருக்கானு சொன்னாலா இல்லையா மேடம் என்று கேட்கிறான். அதற்கு போலீஸ் அவ வாயே திறக்க மாட்டேங்கிறா சார் என்று சொல்கிறார்கள். அதற்குள், வெண்பா கண்ணம்மா அருகே வந்து, ஹேமா எங்க சொல்லுடி, எங்க கொண்டு போய் அடைச்சு வச்சிருக்க அப்படியே நல்லவ மாதிரி வேஷம் போட்டு குழந்தைங்கள கடத்துற அளவுக்கு வந்துட்டியா? என்று கேட்கிறாள். இதனால், கோபமடைந்த கண்ணம்மா ஏய் என்று பாய்ந்து வெண்பாவின் கழுத்தைப் பிடித்து நெறிக்கிறாள். இதைப்பார்த்த போலீசார் விலக்கி விடுகிறார்கள். போலீசார் கண்ணம்மாவை எச்சரிக்கிறார்கள்.
பாரதி, “நீ என்ன அவ்வளவு பெரிய ரவுடியா? வெண்பாவை கொலை பண்ண பாத்தனு இன்னொரு கம்ப்ளெய்ண்ட் பண்ணனு வச்சுக்க அவ்வளவுதான்” என்று கண்ணம்மாவை மிரட்டுகிறான். அதற்கு கண்ணம்மா, இந்த கொலை பண்ண பார்க்கிறது, அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கிறது, அடுத்த புருஷனோட வாழ நினைக்கிறது எல்லாம் இதோ இங்க நிக்கிறாளே இவளோட வேலை என்று வெண்பாவைக் காட்டி கூறுகிறாள். எங்கிட்ட பூச்சாண்டி காட்டாத என்று கூறுகிறாள்.
பாரதி கண்ணம்மாவிடம் ஹேமாவை எங்கே கடத்தி வச்சிருக்க சொல்லு உன் மேல் கொடுத்திருக்கிற கம்ப்ளெய்ண்ட்ட நான் வாபஸ் வாங்கிக்கறேன். ஹேமாவை நான் கடத்தல, அவ எங்க இருக்கானு போய் தேடு, திரும்ப திரும்ப எங்கிட்ட கேட்டு என் உயிரை எடுக்காத என்று கூறுகிறாள். அதற்கு பாரதி அப்படியே நல்லவ மாதிரி நடிக்காத ஹேமா எங்க சொல்லு என்று கேட்கிறான்.
அப்போது, வெண்பா, எப்படி பொய் சொல்றா பாரு, இவ ஹேமாவை கடத்தியதை நீ உன் ரெண்டு கண்ணால பார்த்த, எப்படி பொய் சொல்றா பாரு என்று பாரதியிடம் கூறுகிறாள். இதனால், கோபம் அடையும் கண்ணம்மா, நான் கடத்தியதை நீ பார்த்தியா என்று பாரதியிடம் கேட்கிறாள்.
ஆமாண்டி நீ ஹேமாவை ஆட்டோவில் கூட்டிக்கொண்டு போனதை நான் பார்த்தேன். பின்னாடியே வந்தேன் ஆனால் புடிக்க முடியல என்று கூறுகிறான். இதைக் கேட்ட கண்ணம்மா, இத்தனை நாளா உனக்கு புத்திதான் சரியில்லைனு நினைச்சேன். இப்போதான், உனக்கு கண்ணும் சரியில்லைனு தெரியுது என்று கூறுகிறாள்.
இதற்கு கண்ணம்மா, ஹேமாவை மத்தியானம் கடைசியா, ஏர்போர்ட் ஆஃபீஸ்ல உங்கூடப் பார்த்தேன். அதற்குப் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை… வீணா என் மேல சந்தேகப்பட்டு நேரத்தை கடத்தாதீங்க ஹேமாவை கண்டுபிடிக்கற வழியைப் பாருங்க என்று கூறுகிறாள். அதற்கு பாரதி நீ இப்படி சொன்னா நான் நம்பிவிடுவேனா? உன்னையும் உன் பொண்ணையும் பிரிப்பேன்னு சவால் விவ்வதான நீ என்று கேட்கிறான்.
அதற்கு கண்ணம்மா, நான் ஒன்னும் பிரிப்பேன்னு சொல்லல, உன்னைவிட ஹேமா மேல அதிகம் பாசம் காட்டுவேன்னுதான் சொன்னேன். உனக்கு கண்ணோட சேர்த்து காதும் போயிடுச்சுனு நினைக்கிறேன் மொதல்ல ஒரு நல்ல டாக்டரா போய் பாரு என்று கூறுகிறாள்.
இதோ பாரு உனக்கு எவ்வளவு பணம் வேணுமானாலும் கொடுக்கிறேன் என் பொண்ணை எங்கிட்ட விட்டுவிடு என்று கூறுகிறாள். ஏன்னா அவதான் என் வாழ்க்கை என்று கண்ணம்மாவிடம் கேட்கிறான். அதற்கு கண்ணம்மா இந்த மாதிரி நேரத்தில கூட ஏன் தான் உன் புத்தி இப்படி போகுதோ, பணம் தரன்னு சொல்ற, நேரத்தை வேஸ்ட் பண்ணாமா போய் தேடு நாலு பேரு கிட்ட விசாரி என்று கூறுகிறாள். அப்போது, வெண்பா குறுக்கிட, அவளை கண்ணம்மா கண்டிக்கிறாள். அதற்கு, பாரதி வெண்பாவைக் அனைத்து இவ என் வொய்ஃப் என்று கூறுகிறான். கண்ணம்மா இவ பெத்த புள்ளை மீது அன்பு காட்டினா அவள் ஏன் சமையல் அம்மானு எங்கிட்ட வரப்போறா? போய் முதல்லை தேடி விசாரிக்கச் சொல்லுங்க மேடம் என்று சொல்கிறாள். விசாரிச்சா யார் கடத்துனாங்கனு தெரியத்தான போகுது, வா வெண்பா என்று கூட்டிக்கொண்டு போகிறான்.
லட்சுமி ஸ்கூல்ல இருந்து அழைத்து வரச் சொல்லி சௌந்தர்யாவுக்கு கண்ணம்மா போன் பண்ணி சொல்கிறாள். சௌந்தர்யாவும் அழைத்துக்கொண்டு வருவதாகவும் வக்கில்கிட்ட பேசி கண்ணம்மாவை வெளியே கொண்டுவருகிறேன் என்று கூறுகிறார்.
அடுத்த காட்சியில், ரவுடிகளால் கடத்தப்பட்டு கட்டிப்போடப்பட்டிருக்கும் ஹேமா அழுகிறாள். அப்போது ஒருவன் சாப்பிடுவதற்கு பழங்களை வாங்கி வந்து தருகிறான். அதையெல்லாம் வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறுகிறாள். ஆனால், ஹேமா அடம் பிடிக்கிறாள். அப்போது, ஒரு ரவுடி பிரியாணி பார்சலை ஹேமாவிடம் கொடுக்கிறான். அதை ஹேமா தட்டி விடுகிறாள். அப்போது, இந்த பொண்ணை சமாளிக்க முடியவில்லை என்று வெண்பாவுக்கு போன் பண்ணுகிறார்கள். ஆனால், வெண்பாவின் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது.
அப்போது ஒரு ரவுடி அந்த 6626னு ஒரு நம்பர் முடியுமே அந்த நம்பர் உங்கிட்ட இருக்கா என்று கூட இருக்கும் ரவுடியிடம் கேட்கிறான். அதற்கு அந்த ரவுடி எங்கிட்ட இல்லை என்று கூறுகிறான். பிறகு, இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு என்று ஒரு நம்பர் சொல்கிறான், 9281026 என்று நம்பருக்கு போன் போடுகிறார்கள். அந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது. அவர்கள் சொல்லும் நம்பர்களை ஹேமா உன்னிப்பாக கேட்டு மனப்பாடம் செய்துகொண்டு மனதுக்குள் சொல்லிப் பார்த்து யோசிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.