Advertisment

Vijay TV Serial: கண்ணம்மாவை பெயிலில் எடுத்த மாமியார்... ரவுடிகளிடம் இருந்து தப்பிய ஹேமா!

Barathi Kannamma Serial: பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், கண்ணம்மாவை அவரது மாமியார் சௌந்தர்யா பெயிலில் வெளியே எடுக்கிறார். ஹேமா தன்னை கடத்திய ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க முயற்சிப்பது என விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
barathi kannamma serial, barathi kannamma, vijay tv, soundarya bailed kannamma, hema escaped from kidnapper, பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல், கண்ணம்மா, சௌந்தர்யா, ஹேமா, பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு, கண்ணம்மாவை பெயிலில் எடுத்த சௌந்தர்யா, ரவுடிகளிடம் இருந்து தப்பிய ஹேமா, barathi, roshni haripriyan, vijay tv serial, barathi kannamma today episode, barathi kannamma serial story

Barathi Kannamma Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

அகிலன் மனைவி அஞ்சலி டாக்டரிடம் டெஸ்ட் கொடுத்துவிட்டு வந்ததையும் டாக்டர் இன்றைக்கு ரிப்போர்ட் கொடுப்பதாகக் கூறியதையும் நினைத்துக்கொண்டிருக்கிறாள். டாக்டர் டெஸ்ட் ரிப்போர்ட் இன்றைக்கு வந்துவிடும்னு சொன்னாங்க ஆனால், இன்னும் போன் பண்ணலையே என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். சரி போனில் கேட்டு விடலாம் என்று டாக்டருக்கு போன் பண்ணி பேசுகிறாள். டாக்டர் ரிப்போர்ட் வந்துவிட்டது நேரில் வாங்க சொல்கிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிடுகிறார். டாக்டர் போனில் சொல்லாமல் நேரில் வரச்சொன்னதால், ஏதாவது பெரிய பிரச்னையா இருக்குமோ என்று அஞ்சலி உள்ளுக்குள் பயப்படுகிறாள். கடவுளே கொஞ்ச நாளாத்தான் வாழ்கை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. அதற்குள் ஏதாவது பெரிய பிரச்னை பண்ணிடாத என்று கடவுளிடம் கேட்கிறாள்.

வீட்டில் மற்றொரு அறையில் கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா, தனது வழக்கறிஞருக்கு போனில் பேசுகிறார். நீதிபதி வீட்டுக்கு நேரில் சென்று பெயில் ஆர்டர் வாங்கிகொண்டு வருமாறு கூறுகிறார். அப்போது, அங்கே வரும் தனது கணவர் வேணுவிடம், தான் கண்ணம்மாவை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தபோது ரொம்ப வருத்தப்பட்டதாக கூறுகிறார். கண்ணம்மா மேல போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்கிறானே இந்த பாரதி என்று வருத்தப்படுகிறாள். வேணுவும் வருத்தப்படுகிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அஞ்சலி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறாள்.

வேணு தனது மருமகள் அஞ்சலியைப் பார்த்து உன் முகம் ஏன்மா ‘டல்’லா இருக்க என்று கேட்கிறார். அஞ்சலி தலைவலி என்று பொய் சொல்லி சமாளிக்கிறாள். அஞ்சலி தனது மாமியார் சௌந்தர்யாவிடம் அத்தை ஹேமாவை பற்றி ஏதாவது தகவல் கிடைச்சதா என்று கேட்கிறாள். எதுவும் கிடைக்கவில்லை நீ கவலைப்படாதமா என்று ஆறுதல் கூறுகிறார்கள். அப்போது, அகிலன் கண்ணம்மாவின் மகள் லட்சுமியை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வருகிறான்.

வீட்டுக்குள் வந்த லட்சுமி, “ஹேமா எங்கே” என்று கேட்கிறாள். எல்லோரும் என்ன சொல்வது என்று தெரியமால் முழிக்கிறார்கள். அகிலன், ஹேமா பாரதியோட வெளியே போயிருக்கிறாள், வந்துவிடுவாள் என்று கூறி சமாளிக்கிறான். லட்சுமி மீண்டும் ஹேமா உடம்புக்கு எப்படி இருக்கிறது என்று கேட்கிறாள். எல்லோரும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். பிறகு அவள் நல்லா இருக்கிறா என்று கூறி சமாளிக்கிறார்கள். எல்லோரும் அமைதியாக இருப்பதைப் பார்த்த லட்சுமி ஏன் எல்லோரும் சோகமா இருக்கிறீங்க… என்ன ஆச்சு என்று கேட்கிறாள். லட்சுமியை சமாளிக்க எல்லோரும் அப்படியெல்லாம் இல்லை என்று வலிந்து சிரித்து சமாளிக்கிறார்கள்.

பிறகு, லட்சுமி அம்மா வராமால் நீங்க வந்து என்னை கூட்டிட்டு வந்திருக்கீங்க, அம்மா எங்க போனாங்க என்று கேட்கிறாள். அதற்கு அகில், “உங்க அம்மா ஆஃபீஸ் வேலையா எங்கேயே வெளியே போயிருக்காங்க… அவங்க வர லேட் ஆகும்னு உங்க அம்மா எங்க அம்மாகிட்ட சொல்லி அவங்க எங்கிட்ட சொல்லி நான் வந்து உன்னை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்தேன்” என்று கூறுகிறான்.

லட்சுமி தனது அம்மா கண்ணம்மாவை காலையிலும் பார்க்கவில்லை, மதியமும் பார்க்கவில்லை, இப்போது ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டுக்னு போக வரலை, அம்மாவை பார்க்காம ஒரு மாதிரியா இருக்கு அவங்க கூட போன்லயாவது பேசனும் என்று கூறுகிறாள். அம்மா வெளியே போயிருக்காங்க… வர லேட் ஆகும் கவலைப்படாத என்று சமாதானம் சொல்கிறாள். சரி என்று அகில் கண்ணம்மாவுக்கு போன் பண்ணி லட்சுமியிடம் கொடுக்கிறான். போனில் கண்ணம்மா அண்ணி என்று போன் நம்பர் பதிவு செய்திருப்பதைப் பார்த்துவிட்டு, லட்சுமியிடம் கொடுக்காமல், பெயரை டெலிட் செய்துவிட்டு மீண்டும் கண்ணம்மாவுக்கு போன் செய்து நான் ஹேமாவுடை சித்தப்பா அகிலன் பேசுகிறேன். லட்சுமி இங்க வீட்லதான் இருக்கா… அவள் உங்ககிட்ட பேசனும்னு சொன்னா என்று போனைத் தருகிறான். கண்ணம்மாவும் லட்சுமியிடம் அம்மா வந்துவிடுகிறேன். தைரியமாக இரு என்று கூறுகிறாள்.

அடுத்த காட்சியில், ஹேமா ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ரவுகளால் கடத்தி வைக்கப்பட்டிருக்கிறாள். ரவுடிகள் சுற்றிலும் அமர்ந்துகொண்டு போனில் கேம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அழுதுகொண்டிருந்த ஹேமா தன்னை கடத்திய ரவுடிகள் போனில் கேம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து யோசிக்கிறாள். தான் யூரின் போக வேண்டும் என்று சொல்கிறாள். சீக்கிரம் போய்விட்டு வா என்று ஒரு ரவுடி சொல்கிறான். அப்போது, ஹேமா ஒரு ஜன்னல் வழியாக நுழைந்து தப்பிக்க முயற்சி செய்கிறாள். ஆனால், அவளுடைய துணி அங்கே இருந்த ஒரு ஆணியில் மாட்டிக்கொள்கிறது. எடுக்க முடியாமல் அழுகிறாள். அதற்குள் ரவுடிகள் ஹேமா தப்பிக்க முயற்சி செய்வதைத் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் ஆணியில் மாட்டிக்கொண்ட துணியை எடுத்துவிட்டு ஹேமா தப்பி ஓடுகிறார்கள். ரவுடிகளும் ஹேமாவை விரட்டுகிறார்கள். ஹேமா அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டாடா ஏஸ் வாகனம் அருகே சென்று ஒளிந்துகொள்கிறாள். ரவுடிகள் ஹேமா எங்கே சென்றால் என்று தெரியாமல் நிற்கிறார்கள். பிறகு, ஹேமாவைத் தேடி ஓடுகிறார்கள். ஹேமா எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அங்கிருந்து ஓடுகிறாள்.

அடுத்த காட்சியில், சௌந்தர்யாவும் அவருடைய வழக்கறிஞரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அவளை பெயிலில் வெளியே அழைத்துக்கொண்டு வருகிறார்கள். வழக்கறிஞர் சகுந்தலா, மாமியார்கள் மருமகள்களை கொடுமைப்படுத்துவதைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்க மாமியார் மருமகளுக்கு பிரச்னை என்றது துடித்துப் போய் பெயிலில் எடுக்க வருவதை இப்போதுதான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு சௌந்தர்யா உன் மேல பாசம் வச்சிருக்கா…” என்று கூறுகிறார்.

இதற்கு கண்ணம்மா, “நான் பிறந்த உடனே என் அம்மா இறந்துட்டாங்க… நான் முதல் முதல் என் அம்மா முகத்தைப் பார்த்தது என் அத்தையோட முகம்தான். உறவு முறையில இவங்க என் அத்தையா இருக்கலாம். ஆனால், அன்பு காட்டுறதுல என் அம்மா” என்று நெகிழ்ச்சியாக கூறுகிறாள்.

சௌந்தர்யா, நீ வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார். நான் எதுக்கு என்று கண்ணம்மா கேட்கிறாள். அதற்கு சௌந்தர்யா, நீ வந்து பாரதியை நாக்கப் புடுங்கற மாதிரி என் எதிருக்க கேளு… நீயும் பாரதியும் எப்படி ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தீங்க… ஊர் உலகத்துல இப்படி பாசமா இருந்திருக்க முடியுமா? யாரு கண்ணு பட்டுச்சோ இன்னைக்கு இந்த மாதிரி எல்லாம் ஆகிடுச்சு” என்று கூறுகிறார். விடுங்க அத்தை, “மீனுக்கு விதி தண்ணிலதான்னு எழுதியிருந்தா அதை யாரால மாத்த முடியும். எனக்கும் அப்படி பழகிடுச்சு…உங்களுக்கே தெரியும் 8 வருஷம் என் புள்ளையும் நானும் தானியாதான வாழுறோம். பெரிய கஷ்டமா எல்லாம் தெரியல அத்தை. என்ன ஒன்னு இந்த மாதிரி என் வாழ்க்கையில வந்து ஏமாத்திட்ட, நாடகமாடிட்ட, துன்புறுத்திட்ட, கடத்திட்டனு வந்து சொல்லாம இருந்தா அதுவே பெரிய உதவிதான்.” என்று கூறுகிறாள்.

சௌந்தர்யா, “என்னைக்காவது உன் பக்கம் நியாயம் இருக்குனு தெரிய வந்தால் பாரதி ரொம்ப வருத்தப்படுவான் கண்ணம்மா, அது மட்டும் உண்மை.” என்று கூறுகிறார்.

அது நடக்கும்போது பார்த்துக்கலாம், வாங்க ஹேமாவைத் தேடலாம் என்று கண்ணம்மா அழைக்கிறாள். வீட்டில் அகிலன், மாமா எல்லோரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். போலீஸ் ஒரு பக்கம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், நீ வீட்டுக்குப் போ என்று சௌந்தர்யா கூறுகிறாள். நான் உன்னை கார்ல வீட்டிலேயே விட்டுவிடுகிறேன் என்று கூறிய சௌந்தர்யா, கண்ணம்மா, வழக்கறிஞர் சகுந்தலா 3 பேரும் காரில் ஏறி புறப்படுகிறாள்.

அடுத்த காட்சியில், ஹேமா ரவுடிகளிடம் இருந்து தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கிறாள். விடுகள் இருக்கிற பகுதிக்கு வந்து விடுகிறாள். ஒரு சுவர் ஓரம் நின்று கொண்டு மூச்சுவாங்குகிறாள். அப்போது அங்கே அவளைக் கடத்திய ரவுடிகள் அவளைத் தேடிக்கொண்டு காரில் வருகிறார்கள். அதில் ஒரு ரவுடி அவள் இங்கே தான் வந்தாள் எல்லோரும் போய் தேடுங்கள் என்று அனுப்பிவிட்டு சுற்றிப் பார்க்கிறான். சுவருக்கு இந்தப் பக்கம் சுவர் மீது கை வைத்துக்கொண்டு ரவுடி பார்க்கிறான். சுவருக்கு அந்தப் பக்கம் ஹேமா மறைந்துகொண்டு அவர்களிடம் மாட்டுக்கொள்ளைக் கூடாது என்று மறைந்து கொண்டு நிற்கிறாள். ரவுடி சுவருக்கு இந்தப் பக்கம் இருந்து பார்க்கிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. ஹேமா ரவுடிகளிடம் மாட்டிக்கொள்வாளா? இல்லை தப்பிப்பிளா என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம். அதுவரை காத்திருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Bharathi Kannamma Serial Barathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment