வடிவேலு பாடலுடன் வண்டியில் பயணம் : குழந்தையாக மாறிய கண்ணம்மா

Barathikannamma Roshini haripriyan trolly video goes viral: சின்ன வயசு ஆசையை நிறைவேற்றிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி; வைரல் வீடியோ…

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, குழந்தை போல் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் உள்ளது. இதில் கண்ணம்மாவாக ரோஷினியும், பாரதியாக அருணும் நடிக்கின்றனர்.

ரோஷினி, சீரியலில் சுயமரியாதை உள்ள தைரியமான பெண் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

பாரதியை காதலித்து திருமணம் செய்து கொள்வது, வெறுக்கும் மாமியாரை விரும்ப வைப்பது, கர்ப்பமாக இருக்கும்போது சந்தேகப்படும் கணவரை விட்டு பிரிவது, சுயமரியாதை உடன் தனியாக குழந்தையை வளர்த்து வருவது என  தைரியமான சவாலான கேரக்டரில் நடிக்கும் கண்ணம்மா, வில்லி வெண்பாவால் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதாக கதை நகர்கிறது. வித்தியாசமான கதையமைப்பு மற்றும் ரோஷினியின் நடிப்புக்காகவே இந்த சீரியலை நிறைய பேர் பார்த்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், ரோஷினி சின்ன குழந்தை போல ஷாப்பிங் ட்ராலியில் அமர்ந்து சென்று இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் வடிவேலு காமெடியில் வரும் ’எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை’… என்ற காமெடி பாடலை பின்னனியில் இணைத்துள்ளார். மேலும், அதில் சின்ன வயசுல இருக்கும்போது இது போல செய்யனும்னு விரும்பினேன், எனக்குள் இருக்கும் குழந்தைதன்மையை மதிக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இப்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவை லைக் செய்து வருவதோடு, தங்களுக்கும் இதுபோன்ற ஆசை இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathikannamma roshini haripriyan trolly video goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com