க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்… பாரதி கண்ணம்மா நடிகை மேக்கப் இல்லாத வீடியோ!

Barathikannamma serial anjali without makeup video goes viral: வீடியோவில் ஸ்வீட்டியும் ஃபரினாவும் க்யூட்டான எக்ஸ்பிரசன்களை கொடுத்துள்ளனர். இதனை நெட்டிசன்கள் அனைவரும் லைக் செய்து வருகின்றனர்.

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் ஸ்வீட்டி என்ற கண்மணி மனோகரனின் மேக்கப் இல்லாத வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்துவருகின்றனர். இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னிலை பெற்று வருகிறது. தற்போது ஒளிப்பரப்பாகி வரும் விஜய் டிவி சீரியல்களிலே அதிக வரவேற்பை பெற்றுள்ள சீரியல் பாரதிகண்ணம்மா தான்.

அற்புதமான கதை மற்றும் சுவாரசியமான திருப்பங்களை கொண்ட திரைக்கதை என இந்த சீரியல் தமிழ் குடும்பங்களை தன்வசமாக்கியுள்ளது. பெரும்பாலும் புதிய நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும், தற்போது மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்த அருண் பிரசாத் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடிக்கின்றனர். வில்லி கதாபாத்திரமான வெண்பாவாக ஃபரினா நடிக்கிறார். மற்றொரு வில்லி கதாபாத்திரமான அஞ்சலியாக நடிகை கண்மணி மனோகரன் நடிக்கிறார். அஞ்சலி கேரக்டர் கதையில் கண்ணம்மாவின் தங்கையாக இருக்கும்.

பாரதி கண்ணம்மா கதையை பொறுத்தவரை கருப்பான பெண்ணை திருமணம் செய்யும் ஹீரோ செய்ய, ஹீரோவை ஒரு தலையாக காதலிக்கும் வில்லி அவர்களுக்குள் கிளப்பிடும் பிரச்சனைகள் என கதை உள்ளது. அழகாக இருக்கும் அஞ்சலியை பெண் பார்க்க வரும் பாரதி, அஞ்சலியின் அக்காவான கருத்த நிறம் கொண்ட கண்ணம்மாவை பிடித்துப்போய் அவளை திருமணம் செய்து கொள்வான். பாரதியை விரும்பிய அஞ்சலி, அவர் கிடைக்காத விரக்தியில், தனது அக்காவான கண்ணம்மாவை பழிவாங்கத் துடிக்கிறார். பின் பாரதியின் தம்பியான அகிலை திருமணம் செய்து பாரதி வீட்டிற்கே மருமகளாக செல்கிறார். இதையொட்டியே பல்வேறு திருப்பங்களுடன் கதைக்களம் நகர்கிறது.

கண்மணி மனோகரன், பாரதிக்கண்ணம்மாவில் அஞ்சலியாக நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். சீரியலில் மேக்கப்போடு நடிக்கும் ஸ்வீட்டி முதன்முறையாக மேக்கப் இல்லாமல் ஒரு வீடியோவில் தோன்றியுள்ளார். அவரது மேக்கப் இல்லாத வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவை அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் ஃபரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் ஸ்வீட்டியும் ஃபரினாவும் க்யூட்டான எக்ஸ்பிரசன்களை கொடுத்துள்ளனர். இதனை நெட்டிசன்கள் அனைவரும் லைக் செய்து வருகின்றனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த கண்மணி மனோகரன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். மாடலிங் செய்து வந்ததோடு, தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் பதிவேற்றி வந்ததன் மூலம் பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பை பெற்றார்.

இந்த குறித்து கண்மணி மனோகரனும் தன்னுடைய பேட்டி ஒன்றில், தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், பயந்துகொண்டே ஆடிஷனுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்ததன் மூலம் அஞ்சலி என்றோ அல்லது அவரது செல்லப்பெயரான ஸ்வீட்டி என்றே அழைக்கப்படுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathikannamma serial anjali without makeup video goes viral

Next Story
அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட ஷிவாங்கி :அப்படி என்னதான் செய்தார்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com