பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா, பாத் டப்பில் எடுத்த போட்டோ ஷூட்டை விமர்சனம் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வருவபர் ஃபரினா ஆசாத். சீரியலில் திருமணமான பாரதியை ஒரு தலையாக காதலித்து வரும் கதாப்பாத்திரத்தில் ஃபரினா நடித்து வருகிறார். பாரதியும் கண்ணம்மாவையும் பிரித்தது மட்டுமில்லாமல் அவர்களை சேர விடாமல் வெண்பா செய்யும் வில்லத்தனங்களை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.
ஃபரினா, ரஹ்மான் உபாயத் என்பரை கடந்த 2017 ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். தற்போது, இந்த தம்பதிகள் விரைவில் பெற்றோர்கள் ஆக போகிறார்கள். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஃபரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார். இதற்கு அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஃபரினா, கர்ப்பமான நிலையில் வயிற்றில் மருதானி போட்டுக்கொண்டு போட்டோ எடுத்து வெளியிட்டு இருந்தார். இதனை சமூக வலைதளவாசிகள் விமர்சனம் செய்தனர்.
அடுத்ததாக, ஃபரினா நீருக்கடியில் போட்டோ ஷூட் நடத்தி, அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது ஃபரினா, பாத் டப்பில் படுத்தவாறு போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும்போது இது தேவையா என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஃபரினா, பாத் டப் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானது. எதையாவது வித்தியாசமானதை பார்த்த மக்கள் நெகட்டிவ் கமெண்ட்களையும் நெகட்டிவிட்டியையும் பரப்புகிறார்கள். அது எதையும் கொடுக்கப் போறது இல்ல. எதையும் நீக்கவில்லை. இப்படியான குறுகிய மனப்பான்மை உள்ளவர்களை மக்கள் தெரிஞ்சிக்கட்டும். என பதிலளித்துள்ளார்.
மேலும், உங்கள் குழந்தைப் பிறப்பை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அதை முழுமையாக அனுபவியுங்கள், பாசிட்டிவ் ஆக இருங்கள் உங்களுக்கு பிடித்தை செய்யுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil