பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளியான படம் முந்தானைமுடிச்சு. இப்படத்தின் பாடல்,வசனம் என அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் வைத்தியராக அறிமுகம் ஆனவர் பயில்வான் ரங்கநாதன்.
இந்தப் படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது சினிமா பத்திரிக்கையாளராக உள்ளார். எனினும் அவர் நடிகர் நடிகைகள் குறித்தும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசி பலரின் எதிர்ப்பை பெற்று வருகிறார். பலரும் அவரது பேச்சுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அவரது இளைய மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பயில்வான் ரங்கநாதன் வீட்டில் எளிய முறையில் அவரது மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். மகளின் நிச்சயதார்த்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, இவரது மகள் குறித்து நடிகை ஷகிலா தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன், நடிகை ஷகிலா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அப்போது, பயில்வான் ரங்கநாதனின் மகள் லெஸ்பியன், இதை அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று ஷகிலா கூறினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயில்வான் ரங்கநாதன் இதற்கு காட்டமாக பதிலளித்தார். இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் தனது மகளுக்கு வீட்டில் எளிய முறையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“