scorecardresearch

தாமரை- சாரதி கல்யாணத்துல அபிஷேக் ஏன்பா அழுவுற?!

பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்வில் அனைவருக்கும் முன்பு தாமிரை மற்றும் அவரது கணவர் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த காட்சியை பார்த்து சக போட்டியாளரான அபிஷேக் கண்கலங்குகிறார்.

தாமரை- சாரதி கல்யாணத்துல அபிஷேக் ஏன்பா அழுவுற?!

பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்வில் அனைவருக்கும் முன்பு தாமிரை மற்றும் அவரது கணவர் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த காட்சியை பார்த்து சக போட்டியாளரான அபிஷேக் கண்கலங்குகிறார்.

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடும் போட்டிதான் பிபி ஜோடிகள். இந்நிலையில் பிபி ஜோடிகள் சீசன் தற்போது பிரபலமான நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இந்த முறை பாவ்னி மற்றும் அமிர் ஜோடிதான் ஹைலைட்.  பாவ்னி காதலை ஏற்பாரா ? இருவருக்கும் திருமணம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. மேலும் சமீபத்தில் பெண் வேடமிட்டு அபிஷேக் நடித்தது சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்படுகிறது. சினிமா பையன் அல்ல சினிமா பொண்ணு என்று அவர் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தாமரை மற்றும் அவரது கணவர் அனைவருக்கும் முன்பு மாலை மாற்றிக்கொள்ளும் காட்சி வெளியாகி இருக்கிறது. தங்களிடம் ஒரு கல்யாண புகைப்படம் இல்லை என்று தாமரை கலங்குகிறார். இதுபோல அவரது கணவரும் கூறுகிறார். மேலும் அவர்களது மகன் கல்யாணத்தை சிறப்பாக செய்வதாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார். இந்நிலையில் மாலை மாற்றிய இருவரும் நடிகை ரம்யாகிருஷ்ணன் காலில் விழுந்து ஆசி பெறுகின்றனர். தொடர்ந்து ஆர்த்தி ஜோடியின் காலில் விழுகின்றனர். இதை பார்க்கும் அபிஷேக் அழுகிறார்.

இந்நிலையில் இதற்கு பார்வையாளர்கள் வெவ்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கல்யாணம் முதல் விவாகரத்து வரை விஜய் டிவியில் செய்துதரப்படும் என்றும். அவரது கணவர் அழகாக இருக்கிறார் என்றும் இந்த தருணம் உணர்வுப்பூர்வமாக உள்ளது என்றும் அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bb 2 jodigal thamarai sathis marriage abishek cries