Advertisment

ராஜமாதாவுடன் நேரடியாக மோதிய வனிதா: அப்போ அந்த விலகலுக்கு இதுதான் காரணமா?

vanitha and ramya krishnan fighting BB Jodigal promo out:பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் கமெண்ட் சொன்ன நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

author-image
WebDesk
New Update
BB Jodigal Tamil News: vanitha and ramya krishnan fight again in BB Jodigal

BB Jodigal Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் என்ற ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் ஜோடிகளாக நடனம் ஆடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Advertisment
publive-image

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார், தான் வெளியேறியதற்கு ஜட்ஜாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வனிதா, இந்த வார எபிசோடில் 'நாடா இல்லை காடா' என்கிற போட்டியில் காளி போல வேடம் அணிந்து ஆடி உள்ளார். இதற்கு கமெண்ட் சொன்ன ரம்யா கிருஷ்ணனுடன் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இது தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் காட்டப்பட்டும் இருக்கிறது.

publive-image

மேலும், 'தன்னை மற்ற போட்டியாளர்கள் உடன் compare செய்யாதீர்கள்' என வனிதா ரம்யா கிருஷ்ணனை பார்த்து கேட்க, இது competition அதெப்படி compare பண்ணாமல் இருக்க முடியும் என ரம்யா கிருஷ்ணன் பதில் கூறியுள்ளார். உடனே கடுப்பாகிய வனிதா மைக்கை கொடுத்துவிட்டு அங்கிருந்து திடீரென வெளியேறி இருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாரா அல்லது நிகழ்ச்சியில் தொடர்வாரா என்பதை இந்த வார ஷோவில் தான் தெரியும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Bigg Boss Tamil Vijay Tv Bigg Boss Ramya Krishnan Bigg Boss Jodigal Vijay Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment