Advertisment

'அவர் 200 படங்கள் நடித்திருக்கலாம்… மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கணும்!' மோதலை விவரித்த வனிதா

vanitha vijayakumar explains why she left BB Jodigal show Tamil News: 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள வனிதா விஜய குமார், "ரம்யா கிருஷ்ணன் 200 படங்க ளுக்கு மேல் நடித்திருக்கலாம். ஆனால், மற்ற கலைஞர்களுக்கு அவர் மரியாதை கொடுக்கணும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BB Jodigal Tamil News: vanitha vijayakumar explains why she left BB Jodigal show

BB Jodigal latest Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு 'பிக் பாஸ்' ஜோடிகள் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் ஜோடிகளாக நடனம் ஆடி வருகிறார்கள்.

Advertisment
publive-image

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார், தான் வெளியேறியதற்கு ஜட்ஜாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார். தற்போது, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வனிதா, ‘நாடா இல்லை காடா’ என்கிற போட்டியில் காளி போல வேடம் அணிந்து ஆடி உள்ளார். இதற்கு கமெண்ட் சொன்ன ரம்யா கிருஷ்ணனுடன் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் வனிதா.

BB Jodigal Tamil News: vanitha and ramya krishnan fight again in BB Jodigal

மேலும், ‘தன்னை மற்ற போட்டியாளர்கள் உடன் compare செய்யாதீர்கள்’ என வனிதா ரம்யா கிருஷ்ணனை பார்த்து கேட்க, இது competition அதெப்படி compare பண்ணாமல் இருக்க முடியும் என ரம்யா கிருஷ்ணன் பதில் கூறியுள்ளார். உடனே கடுப்பாகிய வனிதா மைக்கை கொடுத்துவிட்டு அங்கிருந்து திடீரென வெளியேறி இருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இந்த சம்பவம் நடக்கும் எபிசோடு வரும் ஞாயிறு (25 ஜூலை) ஒளிபரப்பாக உள்ளது.

publive-image

இந்நிலையில், சமீபத்தில் அவரின் யூடூப் சேனல் லைவ்வில் வனிதா பேசியுள்ளார். அப்போது அவரின் ரசிகர்கள் 'நீங்கள் ஏன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினீர்கள்' என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த வனிதா, "இந்த நிகழ்ச்சியை நடத்தும் குழு என்னிடம் வந்து நிகழ்ச்சி பற்றி விளக்கினர். ஆனால் நிகழ்ச்சியில் நடந்தது வேறு. நான் ஏற்கனவே 'குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 1ன் டைட்டில் வின்னர். மேலும் 'கலக்கபோவாடு யாரு' ஷோவின் ஜட்ச். ஆனால் நான் எப்படி இங்கே ஒரு போட்டியாளராக வர முடியும்? என்று அவர்களிடம் வினாவினேன்.

இது ஒரு பெர்பாஃமான்ஸ் அடிப்படையிலான நிகழ்ச்சியாக இருக்கும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது, பார்வையாளர்கள் ரசிப்பதால் நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என குழுவினர் வலியுறுத்தினர். மேலும், என்னை நிகழ்ச்சியில் நுழைய குழுவினர் கட்டாயப்படுத்தியது. ஆனால், நான் விஜய் டிவி என்பதால் நான் ஏற்றுக்கொண்டேன்." என்றார்.

publive-image

பிக் பாஸ் ஜோடிகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட விதம் தனக்கு பிடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ள வனிதா "சம போட்டியாளர்களை ஒப்பிடலாம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் கொடுக்கப்படும்போது, ​​நான் அதை ஏற்றுக்கொள்வேன், ஆனால் அங்கு நடந்தது அப்படி இல்லை.

நிகழ்ச்சியில் என்னுடன் பங்கேற்ற சுரேஷ் சக்ரவர்த்திக்கு அவரது கைகளில் வலி ஏற்பட்டது, ஆனால் நான் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதால் அவரின் முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். நீங்கள் ஒரு நபரை சுட்டிக்காட்டி அவர்களை மோசமாக பார்க்கும் விதம் நன்றாக இல்லை. நாங்கள் அனைவரும் நடிகர்கள். அவர் 200- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் நாம் மற்றொரு கலைஞரை மதிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்" என்று வனிதா கூறியுள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Vanitha Vijayakumar Bigg Boss Tamil Cook With Comali Vanitha Actress Vanitha Bigg Boss Jodigal Kalakka Povathu Yaaru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment