பிக் பாஸ் ஜுரம் இன்னும் தீரவில்லை. அதற்குள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் தொடங்கியது.
டிஸ்னி பளஸ் ஹாட் ஸ்டாரில்’ ஒ.டி.டி.யில் முதன்முதலாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை, 24 மணி நேரமும் பார்க்கலாம். வழக்கம்போல இதையும் கமல்ஹாசனே தொகுத்து வங்குகிறார். இந்நிகழ்ச்சி 48 நாட்கள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் அறிமுக விழா நேற்று நடந்தது. ஒவ்வொரு போட்டியாளரையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். இதில் வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி என கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முக்கியமாக இவர்கள் அனைவரும் பிபி வீட்டில் ஏற்கெனவே கிடைத்த அனுபவம், அதன்மூலம் மக்களிடம் கிடைத்த ரெஸ்பான்ஸ், தங்களின் நிறை, குறைகள் என பல்வேறு அனுபவங்களுடன் மீண்டும் பிபி வீட்டிற்கு திரும்பியுள்ளதால் இம்முறை போட்டி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் பிபி அல்டிமேட் வீட்டில், முதல் நாள் முதல் புரோமோ இன்று வெளியாகியது. முதல் புரோமோவிலேயே, மைக்கில் பேசும் பிக்பாஸ்’ நாமினேட் செய்ய சொல்ல, கன்ஃபெஷன் ரூமில், ஒவ்வொரு போட்டியாளர்களும் தாறுமாறாக ஒருவரையொருவர் மாறிமாறி நாமினேட் செய்கின்றனர்.
2வது புரோமோவில் ஆமான்னா குடி-இல்லன்னா கடி டாஸ்கில், சினேகன் ஒருவரை பற்றி புரளி பேசி’ அவரிடமே நான் மாட்டிக் கொண்டதில்லை என வனிதாவிடம் கேள்வி கேட்க, அதற்கு அவர், பிக்பாஸ் இதுக்கு பதில் உங்களுக்கு தெரியும், உலகத்துக்கே தெரியும் என கூறுகிறார். அப்போது சினேகன் குறுக்கிட்டு யாருக்கும் தெரியாது என சொல்ல, அப்போது வனிதா எழுந்து சரியோ, தப்போ அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. நீங்கள் கிடையாது என கோவப்பட்டு நான் டாஸ்க்ல இருந்து வெளியே போறேன் என எழுந்து போகிறார்.
3வது புரோமோவில்- மறுபடியும் வனிதா கேம்க்குள் வரும்போது, ஷாரிக் நீங்க வராதீங்க என சொல்ல, அதற்கு வனிதா அதையெல்லாம் நீ சொல்லக்கூடாது என கூற, அதற்கு ஷாரிக் நான் சொல்லுவேன்; இப்போ நான் கேப்டன் என்கிறார். இப்படி இருவரும் மாறிமாறி வாக்குவாதம் செய்ய, வனிதா நான் போறேன் என கிளம்ப, அதற்கு ஷாரிக் போங்க. உங்கள யாரு கூப்பிட்டா என கோவமாக பேசுகிறார்.
அப்போது பாலாஜி குறுக்கிட்டு, நீங்க உங்க சொந்த வீடுன்னு நினைச்சுக்கிட்டிங்க.. நீங்க ஓனர் இல்ல.. ஹெளஸ்மேட்டு என வனிதாவுக்கு நோஸ்கட் கொடுக்கிறார்.
இப்படி பிபி அல்டிமேட்டில் முதல் நாள் வெளியான மூன்று ப்ரோமக்களுமே பயங்கர அடிதடியுடன் பார்க்கவே வைலண்டாக இருக்கிறது. இதைப்பார்த்த பிபி ரசிகர்கள் ஒவ்வொரு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், பிபி அல்டிமேட்டில்’ மக்கள் மனங்களை வெல்லப்போவது யார் என்பது போகபோகத்தான் தெரியும்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“