பீஸ்ட் படத்தின் முதல் பாடல்… அரபிக் குத்து; ரிலீஸ் எப்ப தெரியுமா?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

author-image
WebDesk
New Update
அரபிக் குத்து புரமோவில் அஜித்: இதை விஜய் ரசிகர்கள் லைக் பண்றாங்களா?

Beast first single Arabic Kuthu: Vijay, Sivakarthikeyan, Nelson Dilpkumar, Anirudh Ravichander unite for a funny skit: விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தநிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்காக, இயக்குனர் நெல்சன் தில்ப்குமார் ஒரு வேடிக்கையான ப்ரோமோவைக் கொண்டு வந்துள்ளார். அவரது முந்தைய திரைப்படமான டாக்டரை விளம்பரப்படுத்துவதற்கான இயக்குனரின் அணுகுமுறை இதுவாகும். அதே பாணியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் ஸ்டுடியோவில் ஸ்கிட் நடைபெறுகிறது. மேலும் நெல்சன், பழைய நினைவுகளுக்காக, முழு நாடகத்தின் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயனையும் இணைத்துள்ளார்.

Advertisment
Advertisements

நகைச்சுவையின் ஒரு பகுதியாக இருப்பதைத் தவிர, சிவகார்த்திகேயன் அரேபிய இசை மற்றும் தமிழ் நாட்டுப்புற இசைகளின் கலவையான “அரபிக் குத்து” என்ற பாடலுக்கான வரிகளையும் எழுதியுள்ளார். வீடியோவில் அனிருத், “உலகம் முழுவதும் செல்வோம் என்று கூறியுள்ளார். மேலும் பாடல் குறித்து விஜய்க்கு போன் செய்து சொல்கிறார் அனிருத். பாடல் பெயரை விஜய் கேட்க, அரபிக்குத்து என்கிறார் அனிருத். பாடல் பெயரை கேட்டதும் நெல்சன், அனிருத் மற்றும் சிவகார்த்திக்கேயனை கலாய்க்கிறார் விஜய்.

"அரபிக் குத்து" பிப்ரவரி 14 அன்று காதலர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து வெளியாகிறது.

கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட தயாராகி வருகிறது. கன்னட நட்சத்திரம் யாஷின் பன்மொழிப் படமான கேஜிஎஃப்: அத்தியாயம் 2 உடன் மோதுவதால், ஏப்ரல் 14 ஆம் தேதி இதை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vijay Beastmode

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: