Beast box office collection day 1:பீஸ்ட் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா? பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!
Beast movie review, Beast Twitter review, Actor Vijay, Pooja Hegde, Beast Movie box Office Collection, First day beast collection, Beast box office collection in USA-தமிழ் சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை இப்படம் தகர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Beast movie review, Beast Twitter review, Actor Vijay, Pooja Hegde, Beast Movie box Office Collection, First day beast collection, Beast box office collection in USA-தமிழ் சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை இப்படம் தகர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
Advertisment
பீஸ்ட் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் புயலைக் கிளப்பியது. படத்தில்’ இயக்குனர் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் மற்றும் நெல்சனின் டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களிலும் நடித்த ஏராளமான நடிகர்கள் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
பீஸ்ட் படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பீஸ்ட் படம் இன்று வெளியானது. விடுமுறை இல்லாத வாரத்தின் நடுப்பகுதியில் வெளியானாலும், தமிழ் சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை இப்படம் தகர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்பட வர்த்தக நிபுணர்களின் கூற்றுப்படி, பீஸ்ட் தமிழகத்தில் முதல் நாளில் ரூ 40 கோடிக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்புள்ளது.
Advertisment
Advertisements
“தமிழ் சினிமாவில் பீஸ்ட் வசூல் சாதனை படைக்கும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அதற்கு விஜய்யின் நட்சத்திர இமேஜ் தான் காரணம். சமீபத்தில், நானும் சில தயாரிப்பாளர்களும் படத்தின் தொடக்க நாள் வசூலை மதிப்பிட்டோம். இந்தப் படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூல் செய்யும். இந்த வசூல் விஜய்யின் முந்தைய சாதனைகளை முறியடிக்கப் போகிறது.
முன்னதாக சர்கார் திரைப்படம் இதுவரை அதிக முதல் நாள் வசூல் சாதனை படைத்தது, இது தீபாவளி விடுமுறையில் வெளியானது. ஆனால், இது விடுமுறை தினத்தில் வெளியாகவில்லை” என்று திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஜி.தனஞ்செயன் தெரிவித்தார்.
&t=2s
மேலும் பீஸ்ட் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸூம், விமர்சனங்களும் கிடைத்தால், வார இறுதியில் வசூல் அதிகரிக்கும்.
திரைப்பட தயாரிப்பாளரும் திரைப்பட வர்த்தக நிபுணருமான கிரிஷ் ஜோஹரும் பாக்ஸ் ஆபிஸில் பீஸ்டுக்கான "வெறித்தனமான தொடக்கத்தை" கணித்தார்.
பாக்ஸ் ஆபிசில் பீஸ்டுக்கு மான்ஸ்ட்ரஸ் ஸ்டார்ட்… ஆரம்ப காட்சிகளின் ஃபீட்-பேக் அருமையாக உள்ளது !!! பாக்ஸ் ஆபிஸ் பற்றி எரியும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்போது’ அதே பேனரில் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்தில் வெளியானது. தற்போதைக்கு இந்த படத்துக்கு #தலைவர்169 என பெயரிடப்பட்டுள்ளது.
அதேநேரம் இதற்கிடையே, விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது. அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி தளபதி 66 படத்தை இயக்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news