Advertisment

பீஸ்ட் படம் வெளியாவதில் சிக்கல் - விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Beast movie release கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் நடிகர் விஜயின் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
actor vijay beast

Beast movie: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட் திரைப்படம், நாளை (ஏப்ரல் 13) திரையரங்குகளில் வெளியாகிறது. பீஸ்ட் படத்துக்குக்கான டிக்கெட் புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

ஏற்கனவே, முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து இருப்பதாலும், நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி பீஸ்ட் படத்திற்கு கத்தார், குவைத் ஆகிய நாடுகளில் தடை விதித்திருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் நடிகர் விஜயின் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகாது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கரூர் விஜய ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை கரூர் மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.

விநியோகஸ்தர்கள் பீஸ்ட் படத்திற்கு கேட்கும் தொகையானது கட்டுப்படியாகவில்லை. படத்தை வாங்கி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை இரு தரப்பிலும் சுமூகமான முடிவு எட்டப்படும்பட்சத்தில், பீஸ்ட் திரைப்படம் வெளியாகுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கரூர் மாநகரில் உள்ள 7 திரையரங்குகளில் 3 திரையரங்குளில் பீஸ்ட் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment