நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இயக்குனர் நெல்சன். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருதையும் வென்றார்.
தொடர்ந்து தனது நெருங்கிய நண்பன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் இந்த படம் வெளியாகி’ பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இப்படி அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் கொடுக்க, நெல்சன்’ 3வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியது.
இப்போது நெல்சன், தளபதி விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்குகிறார். அதன் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து படம் இப்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, ஜாலியோ ஜூம்கானா, பீஸ்ட் மூடு பாடல் வெளியாகி பயங்கர ஹிட் அடித்தது.
அந்த ஹைப் இன்னமும் குறையவில்லை. அதற்குள் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பீஸ்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் புயலைக் கிளப்பியது. படத்தில் இயக்குனர் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் மற்றும் நெல்சனின் டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களிலும் நடித்த ஏராளமான நடிகர்கள் இதில் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய், பீஸ்ட் பட புரோமோஷனுக்காக, சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இயக்குனர் நெல்சன் தொகுப்பாளராக இருந்து கேள்விகள் கேட்க, விஜய் பதிலளிக்கும் நேர்காணல்’ இப்போது விஜய் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்போது நெல்சன்’ அபர்ணா தாஸ் பிறந்த நாளுக்கு எங்க எல்லாரையும் ரோல்ஸ் ராய்ஸ் காருல ரவுண்டு கூட்டிட்டு போனீங்களே, அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், பெட்ரோல் வேஸ்டுனு நினைக்கிறேன் என கிண்டலாக கூறினார்.
உடனே நெல்சன் என்ன சார் பொசுக்குனு இப்படி சொல்லிட்டீங்க.. அது எங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல் மூவ்மெண்டா இருந்தது தெரியுமா என சொல்ல, உடனே விஜய்; இல்ல சும்மா சொன்னேன். நிஜமாவே நல்ல ரைட் தான் அது. சதீஷ் அடிக்கடி கேட்டுட்டே இருப்பான். அந்த நேரம் சரியா இருந்ததுனால அந்த ரைட்’ம் நல்லா இருந்துச்சு. அதான் போட்டோ, வீடியோ’லாம் எடுத்துட்டு இருந்தீங்களே, அது எதாவது இருந்தா காட்டுங்க என விஜய் சொல்ல, சன் டிவியில் அந்த வீடியோவை ஒளிபரப்பினார்கள். அந்த வீடியோவை அபர்ணா தாஸூம் தன்னுடைய சோஷியல் பக்கத்தில் இப்போது பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், நடன இயக்குனர் சதீஷ் வீடியோ எடுக்க’ நெல்சன், அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே மூவரும் பின் சீட்டில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது முன் சீட்டில் அமர்ந்திருக்கும் சதீஷ் காரில் செல்வதை வீடியோவாக எடுக்க, இவர்தான் ஓனர் விஜய் கார் ஓட்டுவதை காட்டுகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்போது’ அதே பேனரில் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்தில் வெளியானது. தற்போதைக்கு இந்த படத்துக்கு #தலைவர்169 என பெயரிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“