பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாவது பாகம், இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2018இல் வெளியாகி, மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாகவே, கேஜிஎஃப் படத்தின் 2 ஆவது பாகம் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது.
நேற்று ஏப்ரல் 13 வெளியான விஜயின் பீஸ்ட் திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் ரூ70 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் சுமார் 38 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, நடிகர் விஜயின் பீஸ்ட் பட வசூலுடன் யஷின் கேஜிஎஃப் திரைப்படமும் மோதவுள்ளது.
தெலுங்கிலும் ஹிந்தியிலும் பீஸ்ட் படசம் வெளியாகி இருப்பதால் விஜயின் அனைத்து படங்களையும் விட இது சிறப்பான வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹிந்தியில் நேற்று வெளியான பீஸ்ட் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், 2019 இல் வெளியான விஜயின் ‘மாஸ்டர்’ படத்தை விட சிறப்பான வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. ஏனெனில், ‘மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா பெருந்தொற்று இருந்த போதும் வெளியானதாலும், கட்டுப்பாடுகள் இருந்ததாலும் வசூலை குவிக்கவில்லை என்று வர்த்தக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்
‘பீஸ்ட்’ திரைப்படம் முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் ரூ.130 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும், வெளிநாடுகளில் 30% (அதாவது) ரூ30 கோடி வசூல் செய்யும் என்றும் கணித்துள்ளனர்.
இன்று வெளியான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம், தமிழகத்தில் பீஸ்ட்-இன் வசூலுக்கு குறைந்த சதவீதத்திலே பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, விஜய் மாஸ் ஹீரோவாகவும், ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதாலும், தமிழகத்தில் ‘கேஜிஎஃப் 2’ வசூலை ‘பீஸ்ட்’ முறியடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil