Beast and KGF tickets: ஏப்ரல் மாதத்தில் இந்த வாரம் 3 பெரிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதலை எதிர்கொள்கின்றன, அதில் இரண்டு தென்னிந்திய படங்கள், இன்னொன்று ஷாஹித் கபூர் நடித்த பாலிவுட் படம் ஜெர்சி. இது 2019 இல் வெளியான ஒரு தென்னிந்திய படத்தின் ரீமேக் ஆகும்.
யாஷ், சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் மற்றும் ரவீனா டாண்டன் நடித்துள்ள கேஜிஎஃப் 2 ஏப்ரல் 14 அன்று திரைக்கு வருகிறது. நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கிய விஜய்யின் பீஸ்ட் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக, விவேக் அக்னிஹோத்ரியின்’ தி காஷ்மீர் ஃபைல்ஸ்,ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சென்னை, மும்பை டெல்லி மற்றும் பிற நகரங்களில் பாக்ஸ் ஆபிஸில் KGF: 2 மற்றும் பீஸ்ட் படங்களின் அட்வான்ஸ் புக்கிங் பற்றி விரிவான பார்வை இங்கே!
மும்பை
KGF: 2 (ஹிந்தி) காட்சிகள், நகரத்தில் 15% வேகமாக நிரம்பி வருகின்றன, அதே நேரத்தில் அதன் கன்னடம் மற்றும் தெலுங்கு காட்சிக்கான டிக்கெட்டுகள் மிக அதிகமாக உள்ளன.
மறுபுறம், பீஸ்ட் (இந்தி) க்கான காட்சிக்கான முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. அதே சமயம் அதன் தமிழ் பதிப்பிற்கான 2D காட்சிகள் இரண்டு திரையரங்குகளில் உள்ளன.
டெல்லி
டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியம் முழுவதும், KGF ஹிந்திக்கான 30% ஷோக்கள் மட்டுமே’ வேகமாக நிரம்பி வருகின்றன: பிராந்திய மொழிக்கான முன்பதிவு செய்வதில் ரசிகர்கள் விருப்பம் காட்டவில்லை,
மும்பையைப் போலல்லாமல், எந்த மொழியிலும் பீஸ்டுக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.
பெங்களூரு
தற்போதைய நிலவரப்படி KGF க்கு காட்சிகள் எதுவும் இல்லை (அனைத்து மொழிகளும்).
கன்னட காட்சிகள் கிடைப்பதாலும், தமிழில் 10% மட்டுமே வேகமாக நிரப்பப்படுவதாலும் பீஸ்ட் முன்னணியில் இருக்கிறது.
ஹைதரபாத்
KGFக்கான முன்பதிவு (அனைத்து மொழிகளும்) இன்னும் திறக்கப்படவில்லை, அதே சமயம் பீஸ்ட் (தமிழ் & தெலுங்கு) காட்சிகள் 60% மட்டுமே வேகமாக நிரம்பி வருகின்றன. பீஸ்ட் படத்துக்கான முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை.
அகமதாபாத்
பிராந்திய மொழியில் இல்லை என்றாலும், அஹமதாபாத்தில் KGF ஹிந்தி முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட 40% டிக்கெட் வேகமாக நிரப்பப்படுகின்றன. அதே நேரத்தில் பிராந்திய மொழிகளுக்கான காட்சிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
பீஸ்ட் (அனைத்து மொழிகளும்)க்கான முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை.
சென்னை
பீஸ்ட் (தமிழ்) படத்தின் 60% காட்சிகள் விற்றுத் தீர்ந்து, 35% மட்டுமே வேகமாக நிரம்பியதால், விஜய் படம் சென்னையில் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
KGF: 2 (தமிழ்) இன் 70% காட்சிகள் வேகமாக நிறைவடைகின்றன.
பாக்ஸ் ஆபிஸ் போரில் இறுதியாக யார் வெல்வார்கள் என்பதைப் பார்க்க ஓரிரு நாட்கள் காத்திருப்போம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“