Advertisment

மீண்டும் மீண்டும் மாரடைப்பு.. 24 வயதில் துடிதுடித்து உயிரிழந்த பெங்காலி நடிகை

24 வயதில் துடிதுடித்து உயிரிழந்த பெங்காலி நடிகை

author-image
WebDesk
New Update
Bengali actor Aindrila Sharma passes away

24 வயதான பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா

பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா (Aindrila Sharma) தனது 24 வயதில் காலமானார்.

24 வயதான பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

Advertisment

இந்த நிலையில், அவருக்கு மீண்டும் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவு திரும்பாமலே இன்று (நவ.20) அவர் உயிரிழந்தார்.

முன்னதாக, நவ.1ஆம் தேதி ஐந்த்ரிலா சர்மாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அவரின் மண்டையோட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால், இடது முன்பக்க டெம்போரோபரியட்டல் டி-கம்ப்ரசிவ் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

ஐந்த்ரிலா சர்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், மேற்கு வங்காளத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்து வளர்ந்தார். அவர் ஜுமுர் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

தொடர்ந்து, மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

இது தவிர அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment