Most Romantic Tamil Movies to Watch on Valentines Day : 2019ம் ஆண்டின் காதலர் தினத்தை வீட்டில் இருந்தபடியே கொண்டாட நினைக்கும் காதலர்கள் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் பல இருக்கிறது.
இன்றைய காதலர் தினத்தில், நிச்சயம் எல்லோராலும் நினைத்தபடியெல்லாம் செலவு செய்ய முடியாது. ஆனாலும் இந்த தினத்தை எப்படியாவது அழகானதாக்க வேண்டும் என்ற ஆசை மனதில் நிறைந்திருக்கும். பணத்தை பார்த்து வராமல் மனதை பார்த்து வருவது தானே காதல்…
பிரம்மாண்டமான இடத்தில் அன்பானவர்களுடன் நேரம் செலவிடுவதை விட, தனிமையில் வீட்டிலேயே இருக்க ஆசைப்படுவார்கள். உங்கள் வீட்டிலேயே மெழுகுவத்தி ஏற்றி, ரோஜா மலர்களால் அலங்கரித்து, சிவப்பு மற்றும் சிரியல் பல்புகளால் அழகு கூட்டினாலே சிறப்பானதாகும் காதலர் தினம்.
இந்த தினத்தில் உங்கள் காதலர் அல்லது காதலியோடு இணைந்து நல்ல காதல் படங்கள் பார்ப்பதும் தனி சுகம் தான். அப்படி ஒரு பிளான் உங்களுக்கு இருந்தால், இந்த தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் உதவும்.
காதலர் தினத்தில் சிறந்த காதல் படங்களின் பட்டியலை நாங்கள் வழங்குகிறோம். காதலோடு பார்த்து மகிழுங்கள்:
1. 96 திரைப்படம்
பள்ளிப்பருவத்தில் பிரிந்திருந்தாலும் காதல் அழகானது, மரியாதைக்குரியது என உணர்த்திய மெகா ஹிட் திரைப்படம். அதிலும் இந்த படத்தில் காதலே காதலே பாடல் வரும்போது மனதிற்குள் இருக்கும் காதலின் ஆழத்தின் மூழ்காதவர்களே கிடையாது.
2. பிரேமம்
அடடா… இந்த படத்தின் பெயரை சொல்லும்போதே பிரேமம் உள்ளிருந்து அருவியாக கொட்டுகிறதே. நிவின் பாலி – மலர் சாய் பல்லவி இடையே இருக்கும் அந்த கெமிஸ்டிரி லெவலே வேறு. ஆனால் ஒரு எச்சரிக்கை… உங்கள் அருகே மலர் போல காதலி இருக்கும்போது மலர் டீச்சரை ரசித்துவிடாதீர்கள். பின்னர் இதுவே இறுதியான காதலர் தினமாக மாறும் அபாயம் ஏற்படும்.
3. ராஜா ராணி
விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்டாலும், எதாவது ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் நிச்சயம் காதலிக்க முடியும் என்று உணர்த்தும் படம். திருமணமாகி இருவருக்கும் இடையே விரிசல் இருந்தால் நிச்சயம் பாருங்கள்
4. ஓகே கண்மணி
லிவ் இன் வாழ்க்கையில் ஈடுபட்டு திருமணம் மீது விருப்பம் இல்லை என இருக்கும் இரண்டு காதலர்களும் ஒரு கட்டத்தில் திருமணம் தான் சரியான முடிவு என்று தீர்மானிக்கும் அழகான கிளைமேக்ஸ் கொண்ட படம். திருமணம் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் காதலர்களே கட்டாயம் பாருங்கள்.
5. அலைபாயுதே
எவர்கிரீன் காதல் படம் என்றால் அது அலைபாயுதே தான். வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டு தனியே வாழும் ஜோடி. இவர்களுக்குள் பல சண்டை மனசஞ்சலங்கள். ஆனால் எதிர்பாராத திருப்பத்தில், இருவருக்குள்ளும் அந்த காதல் அப்படியே மாறாமல் ஆழமாக உள்ளது என்பதை உணர்த்தும் படம்.
உங்கள் காதலுக்கு இந்த பாடல்களை எல்லாம் ஷேர் அசத்துங்கள்
காதல் நிறைந்திருக்கும் இந்த படங்களை உங்கள் காதலுக்குரியவர்களுடன் இணைந்து பாருங்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Best romantic movies to watch on valentines day
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!
பூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்
வோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்