கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று சுய ஊரடங்கு அமலில் உள்ளது. பிரதமர் மோடியின் இந்த Janata Curfew அழைப்புக்கு நாடு முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் சான்றாக இன்றைய நிகழ்வு அமைகிறது.
எனினும், வீட்டிற்குள் எவ்வளவு நேரம் தான் முடங்கிக் கிடப்பது? வெளியேவும் செல்லக் கூடாது, வீட்டிற்கு வெளியே கூட பொழுதை கழிக்க முடியாது. அனைத்து நிமிடங்களும் வீட்டிற்குள் தான் கழிய வேண்டும் எனில் மக்களின் நிலை உண்மையில் பரிதாபம் தான்.
இப்படியொரு கொடூர வில்லனை எதிர்பார்க்காத புதுமணத் தம்பதிகள்!
அடுத்த ஆப்ஷன் டிவி, மொபைல் போன்றவை தான். இவ்வளவு நாள் வேலை வேலை என்று பிஸியாக இருந்தவர்கள், இந்த தனிமைப்படுத்தலில் சில சுவாரஸ்ய வெப் சீரிஸ்களை பார்க்கலாம்.
ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சில வெப் சீரிஸ் குறித்து இங்கே பார்க்கலாம்,
ஆட்டோ ஷங்கர்
இயக்குனர் – ரங்கா
Zee5
ஆரம்பமே ரணகளம் தான்… ஆட்டோ ஷங்கர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? உங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள்… கதை கதையை சொல்வார்கள். ஆனால், திரை வடிவமாக பார்க்க வேண்டுமெனில், Zee5ல் இருக்கும் ஆட்டோ ஷங்கர் வெப் சீரிஸ் பார்க்கலாம்.
இப்போதும் நடக்கும் கிரைம்-லாம் ஜுஜூபி… இதைப் பாருங்க, டர்ர் ஆயிடுவீங்க.
குயின்
இயக்குனர்கள் – கெளதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன்
MX Player
குயின் பற்றிய அறிமுகன் உங்களுக்கு தேவையா என்ன? இது யாருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது என்பது குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பரபரப்புக்கும், திரைக்கதைக்கும் பஞ்சமில்லாத வெப் சீரிஸ் இது.
As I’m Suffering from Kadhal
இயக்குனர் – பாலாஜி மோகன்</p>
ஹாட்ஸ்டார்
2017ல் வெளியான இந்த வெப் சீரிஸ்க்கு இப்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளது. நவயுக காதலில் இருக்கும் ‘பல’ விஷயங்களை வெளிப்படுத்தி இருப்பார் இயக்குனர். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
கள்ளச்சிரிப்பு
இயக்குனர் – ரோஹித் நந்தகுமார்
Zee5
ரசிகர்களால் சிறந்த வெப் சீரிஸ் என கொண்டாடப்பட்ட சீரிஸ் இது. காதல் கதை தான். ஆனால், அதில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. பாருங்க, மெர்சல் ஆகிடுவீங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”