/indian-express-tamil/media/media_files/2025/10/10/betaal-2025-10-10-18-04-21.jpg)
வார இறுதியில் ஓ.டி.டி-யில் என்ன படம் பார்க்கலாம் என்று குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே ஆரம்பம் முதல் இறுதி வரை மரண பயத்தை காட்டும் த்ரில்லர் தொடர் ரிலீஸாகியுள்ளது. நீங்கள் ஹாரர், த்ரில்லரை மிகவும் விரும்புவீர்கள் என்றால் இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் பார்த்து மகிழலாம்.
புராண கதைகளை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடருக்கு ‘பேடால்’ (Betaal)என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடர் ஒரு சீசனுக்கு நான்கு எபிசோடுகளை கொண்டது. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் சுரங்கப் பாதையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற அரசு விரும்புகிறது. இதனால் அந்த சுரங்க பாதையை உடைத்து சாலை அமைக்கும் பணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால், இதனை அந்தப் பகுதியில் வாழும் மக்கள் எதிர்க்கின்றனர். சுரங்கப் பாதையை நெடுஞ்சாலையாக மாற்றும் அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ராணுவத்தினர் அகற்றுகின்றனர். இதில் கிராம மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இதன் பிறகு தான் ஆட்டமே தொடங்குகிறது. திகில் சம்பவங்கள் நிறைந்த காட்சிகளாக வெப் தொடர் நகர்கிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் ’பேடால்’ வெப் தொடரின் கதைக்களம்.
ஒவ்வொரு எபிசோடையும் காட்சிப்படுத்திய விதமும் அதன் முடிவும் கவனத்தை ஈர்க்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை துண்டுகிறது. சில எதிர்பாராத சம்பவங்கள், ட்விஸ்ட், த்ரில்லர் தருணங்கள் என பெரிய அளவில் எங்கும் கவனத்தை திசை திருப்பவிடாமல் நகர்கிறது. குறிப்பாக இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்புடனும், த்கிலுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பவர்களுக்கு அச்சத்தை கொடுக்கலாம்.
’பேடால்’ வெப் தொடரில் நடித்தவர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். நடிகர்களின் நடிப்பு, விறுவிறுப்பான காட்சிகள் வெப் தொடருக்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது. வார இறுதியில் போரடிக்கும் ரசிகர்கள் இந்த வெப்தொடரை பார்த்து விடுமுறை நாட்களை என்ஜாய் பண்ணுங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.