/indian-express-tamil/media/media_files/2024/11/30/vXZehCjeDxOKmBoWVI2x.jpg)
பிரபல நடிகர் பாக்யராஜ், தனது பிள்ளைகளுடன் எம்.ஜி.ஆரை சந்தித்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். தனது குழந்தைகளுடன் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றபோது இது நிகழ்ந்ததாகவும் டாக்கீஸ்திரை யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களில் ஒருவராவார். அப்படி இருக்கையில் தனது மகன் எம்.ஜி.ஆர் - ஐ தாத்தா என்று அழைத்ததாகவும் அதற்கு எம்.ஜி.ஆர் கண்ணீர்விட்டு குழந்தைகளுக்கு தங்க சங்கிலி அணிவித்து விட்டதாகவும் அவர் கூறினார். ஒருநாள் தனது பிள்ளைகளோடு அவரை தந்திக்க சென்றபோது எம்.ஜி.ஆருடன் பேசிக் கொண்டிருந்த பாக்யராஜ், தனது குழந்தையிடம் "இவர் யார்?" என்று கேட்டார். எதிர்பாராதவிதமாக, அந்தக் குழந்தை எம்.ஜி.ஆரை "எம்.ஜி.ஆர் தாத்தா" என்று செல்லமாக அழைத்தது. இந்தக் குழந்தைத்தனமான அழைப்பு எம்.ஜி.ஆரை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது.
பொதுவாகவே குழந்தைகளை மிகவும் நேசித்த எம்.ஜி.ஆர், இந்தப் பேச்சைக் கேட்டு கண் கலங்கினார். உடனே அந்தக் குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டார். இதுமட்டுமல்லாமல், சிறிய குழந்தைகளுக்கு சங்கிலி பரிசளிக்கும் பழக்கமுடைய எம்.ஜி.ஆர், தனது கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றி, பாக்யராஜின் இரண்டு குழந்தைகளுக்கும் அணிவித்தார்.
ஒரு குழந்தைக்கு மட்டும் பரிசளித்தால் மற்ற குழந்தை வருத்தப்படும் என்று கருதியே அவர் இருவருக்கும் சங்கிலி அணிவித்ததாக பாக்யராஜ் பின்னர் குறிப்பிட்டார். "எம்.ஜி.ஆர் தாத்தா" என்ற ஒற்றை அழைப்பு, தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆரின் அன்பையும், கருணையையும் வெளிப்படுத்திய ஒரு நெகிழ்ச்சியான தருணமாகும். இச்சம்பவம், எம்.ஜி.ஆரின் குழந்தை பாசத்தையும், அவரது பெருந்தன்மையையும் ஒருசேர எடுத்துக்காட்டுகிறது.
பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார். குறிப்பாக அவசர போலீஸ் 100 என்ற திரைப்படம். எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்றுபோன "அண்ணா நீ என் தெய்வம்" என்ற படத்தின் சில காட்சிகள் இதில் பயன்படுத்தப்பட்டன. இந்த படத்தை பாக்யராஜ் தனது சொந்த திரைக்கதையுடன் இயக்கி, அவசர போலீஸ் 100 என்ற பெயரில் வெளியிட்டு வெற்றி கண்டார். அந்த அளவிற்கு பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர் மீது அதீத அன்பு உள்ளது என்று பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.