scorecardresearch

நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. விஜய் டிவி சீரியலுக்கு ரசிகையான தேவசேனா

அமெரிக்காவில் படித்து விட்டு வந்த கதாநாயகிக்கு திடீரென தாலி கட்டி அதிர்ச்சி கொடுக்கிறார் கதாநாயகன். அதன்பிறகு நாயகனே தனது கணவன் அவனது வீட்டில் தஞ்சமடைகிறார் நாயகி

நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. விஜய் டிவி சீரியலுக்கு ரசிகையான தேவசேனா

சின்னத்திரையில் நிலவி வரும் போட்டியால் சீரியல் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் சீரியலுக்கு பெயர்போன விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். விஜய் டிவி சீரியல் நடிகர் நடிகைளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட சீரியல் தான் தென்றல் வந்து என்னைத்தொடும்.  மற்ற சீரியல்களை விட சற்றே வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அமெரிக்காவில் படித்து விட்டு வந்த கதாநாயகிக்கு திடீரென தாலி கட்டி அதிர்ச்சி கொடுக்கிறார் கதாநாயகன்.

அடுத்து நாயகனே தனது கணவன் என்று நாயகி தனது வீட்டை விட்டு வெளியேறி நாயகன் வீட்டில் தஞ்சமடைகிறார் முதலில் அவளை வெறுக்கும் நாயகன் தற்போது அவரை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாத நிலையில். இருவரும் மாடியில் டெண்ட் அடித்து தங்கியுள்ளனர்.

வினோத் பாபு பவித்ரா ஜனனி முக்கிய கேரக்டரில் நடித்து வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாள்தோறும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பொதுவான ரசிகர்கள் மட்டுமின்றி முன்னணி நடிகை ஒருவரும் இந்த சீரியலுக்கு ரசிகையாக உள்ளார்

சமீபத்தில் விஜய் டிவியின் ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத் பாவு பவித்ரா ஜனனி இருவரும் இது தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது பேசிய வினோத் பாபு, தங்களின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை பார்த்து மிகவும் பிடித்துள்ளதாகவும். தொடர்ந்து இந்த சீரியலை தான் பார்த்து வருவதாகவும், பாகுபலி நாயகி அனுஷ்கா போன் செய்து வாழ்த்தியதாக கூறியுளளார்.

மேலும் தனது அம்மாவும் இந்த சீரியலின் மிக்பெரிய ரசிகை என்றும். உங்களிடம் பேசியதை நான் அவர்களிடம் சொன்னேன் என்று அனுஷ்கா சொன்னதாக கூறிய வினோத் பாபு பவித்ரா ஜனனி இருவரும் நிகழ்ச்சி மேடையிலேயே அனுஷ்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bhahubali anushka wish to thendral vanthu ennai thodum serial stars