அரசியல்வாதியாக ஜெயித்து காட்டினார் மகேஷ் பாபு!!!

இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவை அன்னாந்து பார்க்க வைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமில்லை தற்போது தெலுங்கு தேசத்திலும்  தற்போது  பரப்பரப்பான அரசியல்  சூழல் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில்  வெளிவந்திருக்கும் திரைப்படம்  “ ‘பாரத் அனே நேனு’ .

சமீபத்தில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவை அன்னாந்து பார்க்க வைத்துள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் ஏகப்பட்ட பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கொரதலா சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மகேஷ் பாபு அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.

இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை செய்துள்ளது. ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு இப்படி ஒரு வசூல் மகேஷ்பாபுவின் ‘பாரத் அனே நேனு’ படத்திற்கு மட்டும் தான் என தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் ஆஸ்திரேலியாவில் மட்டும், பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. தமிழகத்திலேயே இப்படம் ரூ 2 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, உலகம் முழுவதும் இந்தப் படம் 3 நாட்களில் ரூ 135 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்று கூறி வருகின்றனர்.உலகம் முழுக்க சுமார் 45 நாடுகளில் இந்த படம் ரிலீசாகி உள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபிசில், வேகமாக ரூ.25 லட்சத்தை வசூல் செய்த `பாகுபலி’ அல்லாத படம் என்ற பெருமையை ‘பாரத் அனே நேனு’ பெற்றுள்ளது.  கர்நாடாகாவில் இந்த திரைப்படம் தற்போது வரை ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த படத்துடன்,  ராம் சரண் –   சமந்தா நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ திரைப்படமும் திரைக்கு வந்தது.  ஆனால், ரங்கஸ்தலைத்தை விட மகேஷ் பாபுவின் ‘பாரத் அனே நேனு’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.  இந்த படத்தின் வெற்றியை  நடிகர் மகேஷ் பாபு தனது மனைவிக்கு பகிர்ந்துள்ளார்.

மகேஷ் பாபுவின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த ஸ்பைடர் திரைப்படம்  எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடாததால் அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஆனால், பாரத் அனே நேனு  அந்த வருத்தை விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

×Close
×Close