Advertisment

ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் சல்மான் கான், அலி அப்பாஸ் ஜாஃபர் கூட்டணி

சுல்தானைப் போல சல்மான் கானின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் சல்மான் கான், அலி அப்பாஸ் ஜாஃபர் கூட்டணி

பாபு

Advertisment

சல்மான் கானின் ஜெய் ஹேn, டியூப் லைட் சமீபத்தில் வெளியான ரேஸ் 3 படங்களை கவனித்தால் ஒரு ஒற்றுமை தெரியும். இந்தப் படங்கள் மிகக்குறைவாக வசூலித்தவை. இவை அண்டர்புரொடக்ஷனில் இருக்கையில் இந்தப் படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் மிகக்குறைவாகவே இருந்தது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளன. பஜ்ரங்கி பைஜான், சுல்தான், டைகர் ஜிந்தா ஹே போன்றவை. படத்தின் பெயரை அறிவிக்கும் போதே ரசிகர்களிடையே மாஸ் அள்ளும். அப்படியொரு படம்தான் அடுத்து வரவிருக்கும் சல்மான் கான் படம், பாரத்.

பாரத் படத்தின் புகைப்படம் ஒன்றை அப்படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் வெளியிட்டுள்ளார். தீ வளையத்தின் நடுவே பைக்குடன் நின்று கொண்டிருக்கிறார் சல்மான். சில் அவுட்டில் அவரது உருவம் மட்டுமே தெரியும் புகைப்படம். அதற்கே பாலிவுட் அதிருகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சல்மான் கான் யார், அவரது சூப்பர் ஸ்டார் பவர் என்ன என்பது தெரியும் என்பதால் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபரிடமிருந்து தொடங்கலாம்.

அலி அப்பாஸ் ஜாஃபருக்கு 38 வயதுதான் ஆகிறது. 2011 இல் தனது 31 வது வயதில் மேரே பிரதர் கி துல்கன் படத்தை இயக்கினார். படம் ஹிட். அதனையடுத்து 2014 இல் கன்டே என்ற ஆக்ஷன் படம். உடனடியாக 2016 இல் சல்மான் கானின் சுல்தான் படத்தை இயக்கினார். அலி இயக்குநர் மட்டுமில்லை, ஸ்கிரிப்ட் ரைட்டரும்கூட. சுல்தான் படத்தின் ஸ்கிரிப்டை அவர்தான் எழுதினார். 2016 ரம்ஜானுக்கு வெளியான சுல்தான் இந்தியாவில் மட்டும் 300.45 கோடிகளை வசூலித்து ப்ளாக் பஸ்டர் முத்திரையை பதித்தது.

அதற்கு அடுத்த வருடமே அலி இயக்கத்தில் சல்மானின் டைகர் ஜிந்தா ஹே வெளியானது. இது ஏக் தா டைகர் என்ற சல்மானின் ப்ளாக் பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம். இதன் ஸ்கிரிப்டை நீலேஷ் மிஸ்ராவுடன் இணைந்து அலி எழுதினார். 2017 டிசம்பரில் வெளியான டைகர் ஜிந்தா ஹே இந்தியாவில் 339.16 கோடிகளை வசூலித்து மாஸ் ஹிட்டானது. சல்மான் கான், அலி அப்பாஸ் ஜாஃபர் இணைந்தால் வசூல் 300 கோடிக்கு மேல் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாரத் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்.

பாரத் படத்தின் கதை சர்க்கஸை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. சர்க்கஸ் கலைஞராக சல்மான் கான் வருகிறார். சர்க்கஸின் பொற்காலமாக இருந்த அறுபதுகளில் கதை தொடங்கி பல்வேறு காலகட்டங்களை கதை கடந்து செல்கிறது. அதற்கேற்ப ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் சல்மான் கான் தோன்றுவதாக கூறப்படுகிறது. டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து ஸ்பெயின், அபுதாபியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. சுல்தானைப் போல சல்மான் கானின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

338 வயதாகும் அலி அப்பாஸ் ஜாஃபர் தனது 31 வது வயதில் படம் இயக்க ஆரம்பித்து இந்த எட்டு வருடங்களில் பாரத்தையும் சேர்த்து ஐந்து படங்கள் இயக்கியுள்ளார். அதில் மூன்று சல்மான் கான் நடித்தவை. அதிலும் தொடர்ச்சியாக. சல்மானை வைத்து அவர் இயக்கும் ஹாட்ரிக் படம் பாரத். ஹட்ரிக் வெற்றி நிச்சயம் என்கிறது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு.

Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment