நடிகர் சல்மான் கானின் 'பாரத்' படத்திலிருந்து பிரியங்கா சோப்ரா விலகிய பிறகு, அதை மையமாக வைத்து நிறைய பேசப்பட்டது. பிரியங்கா சோப்ராவுக்கும், சல்மான் கானுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பற்றி சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒருவரையொருவர் தாக்க, ஒருபோதும் அவர்கள் மறக்கவில்லை.
நடிகர் சல்மான் கானின் ‘பாரத்’ படத்திலிருந்து பிரியங்கா சோப்ரா விலகிய பிறகு, அதை மையமாக வைத்து நிறைய பேசப்பட்டது. பிரியங்கா சோப்ராவுக்கும், சல்மான் கானுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பற்றி சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒருவரையொருவர் தாக்க, ஒருபோதும் அவர்கள் மறக்கவில்லை.12 ஆண்டுகளுக்குப் பிறகு, அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் மீண்டும் சல்மான் கானும் பிரியங்கா சோப்ராவும் இணைவதாக இருந்தது. பாரத் படத்திற்காக பிரியங்காவை ட்விட்டரில் வரவேற்றார் சல்மான் கான். ”பாரத் குடும்பத்திற்கு பிரியங்கா சோப்ராவை வரவேற்கிறோம். விரைவில் சந்திப்போம்” என்ற சல்மானின் ட்வீட்டுக்கு, ”பாரத் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனைவரையும் செட்டில் சந்திக்கிறேன்” என பதிலளித்திருந்தார் பிரியங்கா சோப்ரா. படப்பிடிப்பு ஆரம்பமாகும் நேரத்தில் தான் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பிரியங்கா.பிரியங்கா சோப்ரா இப்படத்திலிருந்து விலகிய பிறகு, அடுத்து யார் நடிப்பார்கள் என பாலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஷ்ரத்தா கபூர், கரீனா கபூர் கான், கத்ரீனா கைஃப், என சல்மான் கானின் அடுத்த ஹீரோயினைப் பற்றிய ஊகங்கள் முடிவடையவேயில்லை. இறுதியாக, கத்ரீனா கைஃப் தான் ‘குமுத்’ என்கிற ‘மேடம் சார்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.பிரியங்கா சோப்ரா படத்திலிருந்து வெளியேறியது தொடர்பாக பல யூக அறிக்கைகள் வெளி வந்தன. வதந்திகளைப் பற்றி சல்மான் பேசும் வரை எதுவும் உறுதியாகவில்லை. கத்ரீனா இவ்வளவு நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, இந்த படத்தை விட்டு வெளியேறிய பிரியங்காவுக்கு முதலில் நன்றி என நகைச்சுவையாக கூறினார் சல்மான். பிரியங்கா சல்மான் கானை சந்தித்ததாகவும், அவர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொள்வதால் திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னதாகவும் சல்மான் தெரிவித்தார். தேதிகளை தான் சரி செய்ய முன்வந்த போதும், தனது திருமண ஏற்பாடுகளுக்கு எடுக்கும் நேரம் பற்றி உறுதியாக தெரியவில்லை என பிரியங்கா கூறியதாகவும், படம் வெளியான பிறகு கூட அவர் அழைக்கவில்லை என சல்மான் தெரிவித்தார்.சமீபத்தில் ‘த ஸ்கை இஸ் பிங்க்’ படத்தின் இறுதி நாள் பார்ட்டியில் கலந்துக் கொண்ட பிரியங்கா, இந்தப் படத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பே பாரத் படத்திலிருந்து விலகியதாகக் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்த அவர், “எல்லாரும் என் கிட்ட ஏன் அந்தப் படத்துல நடிக்கல, இந்தப் படத்துல நடிக்கல, அந்த மாதிரி பாட்டு பாடல, இந்த மாதிரி டான்ஸ் ஆடலன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. அந்தப் படத்துக்கு ஏன் இவ்ளோ முக்கியத்துவம்” என்றார். படத்தின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், அது ‘பாரத்’ தான் என்பதை அறிந்த குழுவினர் வாய் விட்டு சிரித்தனர்.