புதிய கண்ணம்மா வந்தாச்சு… அட, அப்படியே ரோஷினியை உரிச்சு வச்சது போல இருக்காரே..!

Bharathi Kannama Serial Roshini replaced by Vinusha Viral Photo Tamil News னுஷாவின் மற்ற புகைப்படங்கள் கிடைத்தாலும், கண்ணம்மா கதாபாத்திரத்தின் போட்டோ இல்லையே என்று காத்திருந்தனர்.

Bharathi Kannama Serial Roshini replaced by Vinusha Viral Photo Tamil News
Bharathi Kannama Serial Roshini replaced by Vinusha Viral Photo Tamil News

Bharathi Kannama Serial Roshini replaced by Vinusha Viral Photo Tamil News : டிஆர்பி-ல் நீண்ட நாள்களுக்கு முதல் இடத்தில் இருந்து சாதனை படைத்த சீரியல் என்றால் அது நிச்சயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ தொடர்தான். இந்த சீரில் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஷினி ஹரிப்ரியன். மாடலிங் துறையில் பிஸியாக இருந்த இவரை ‘டஸ்கி நிறத்தழகி’ என்று பலராலும் புகழப்பட்டவர். இவருக்கேற்ற ஸ்க்ரிப்ட் என திடீரென சீரியல் வாய்ப்பு தேடிவர, அதனை இருக்கமாகப் பிடித்துக்கொண்டார்.

ஆனால், இந்த டாப் சீரியலில் இருந்து தற்போது ரோஷினி விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விலகியதற்கான காரணம் சரியாகாது தெரியவில்லை என்றாலும் ரோஷினிக்கு பதிலாக யார் இனி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், வினுஷா எனும் நடிகையைத்தான் கண்ணம்மாவாக தேர்வு செய்திருக்கிறார்கள். இந்தத் தகவல் வெளியான நாளிலிருந்து ‘புதிய கண்ணம்மா வினுஷா யார்’ என்று பலரும் தேடிவந்தனர். வினுஷாவின் மற்ற புகைப்படங்கள் கிடைத்தாலும், கண்ணம்மா கதாபாத்திரத்தின் போட்டோ இல்லையே என்று காத்திருந்தனர்.

ரசிகர்களின் காத்திருப்புக்கு ட்ரீட் அளிக்கும் வகையில், தற்போது கண்ணம்மா கெட்டப்பில் வினுஷாவின் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்த கண்ணம்மா ரசிகர்கள், முன்பு இருந்த ரோஷினி போலவே இருக்கிறார் என்று புகழ்ந்து வருகின்றனர். ஆனாலும், அவரைப்போலவே நடிப்பாரா என்கிற டிஸ்கஷனில் தற்போது மக்கள் இருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannama serial roshini replaced by vinusha viral photo tamil news

Next Story
கமலின் விஸ்வரூபம்.. மக்கள் ஹாப்பி.. ஆனாலும் குறும்படம் மிஸ்ஸிங்!Bigg Boss 5 Tamil Kamal Hassan Surudhi Pavani Thamarai Isaivani
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express