/tamil-ie/media/media_files/uploads/2021/01/2-Copy-2-31.jpg)
bharathi kannamma anjali vijay tv
bharathi kannamma anjali vijay tv விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கிறது. வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து, இரட்டைக் குழந்தைகளும் பிரிந்து விட்டார்கள்.
கண்ணம்மாவை பாரதியுடன் சேர்த்து வைக்க இதை விட்டால் வேறு வழியில்லை எனவும், கறுப்பான குழந்தையை தூக்கிச் செல்கிறார் செளந்தர்யா. கண்ணமாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது, நர்ஸ், செளந்தர்யா, அறிவு மற்றும் அகில் ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.
❤️ #AkhilAnjali ❤️ #BarathiKannamma#VijayTelevisionpic.twitter.com/DlMuhpbWYT
— Vijay Television (@vijaytelevision) January 21, 2021
8 வருடங்களுக்கு பிறகு என எழுத்துக்கள் மாறினாலும் கதையில் மாற்றமில்லை. பாரதி - கண்ணம்மாவின் 2 குழந்தைகள் செளந்தர்ய லட்சுமி கண்ணம்மாவிடமும், பாரதி அவரின் குடும்பத்தாருடன் ஹேமாவும் இருக்கிறார்கள். ஒருபக்கம் கண்ணம்மாவை பாரதியுடன் சேர்த்து விட பல முயற்சிகளை குடும்பத்தார் ஏற்படுத்தி வருகின்றனர். அஞ்சலி தவிர. இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு அஞ்சலி கர்ப்பமாகி இருக்கிறாள்.
இந்த சந்தோஷ செய்தியை கேட்டு மொத்த குடும்பமும் ஆனந்தத்தில் உள்ளனர். ஆனாலும் கண்ணம்மாவை நினைக்காத நாள் இல்லை. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாய் சுற்றி திரிந்த அஞ்சலி அகில் இப்போது லவ்வோ லவ் தான். மனைவிக்காக பணிவிடைகளை செய்ய துவங்கியுள்ளார் அகில். அடடே.. இதுவும் நல்லா தான்யா இருக்கு என்பது போல் அஞ்சலியும் கொஞ்சம் அதிகமாகவே டோசேஜ் கொடுக்கிறாள்.
என்னமோ நல்லா இருந்தா சரி..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.