சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவுக்கு பாரதியின் அம்மா கொடுத்த ட்விஸ்ட் பெரிய கைத்தட்டலை பெற்றுள்ள நிலையில், கண்ணம்மாவும் தனது பங்குக்கு வெண்பாவை வெறுப்பேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Advertisment
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே யாரும் இருக்க கூடாது அப்படி இருந்தால் தம்பதியின் வாழக்கை எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த பாரதி கண்ணம்மா. காதலித்து திருமணம் செய்துகொண்ட கண்ணம்மாவை தோழியின் பேச்சை கேட்டு கைவிட்ட பாரதி வருடங்கள கடந்தாலும் இன்னும் அதே கோபத்துடன் இருக்கிறான்.
மறுபுறம் அவனை தூண்டிவிட்டு கண்ணம்மாவை கைவிட வைத்த வெண்பா செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்து நட்பை தொடர்கிறான். இதில் வெண்பா பாரதியை திருமணம் செய்துகொள்ள பலமுறை முயற்சித்தும் இது நடக்காமல் போனது. இதில் ஒருசிலமுறை பாரதியும் வெண்பாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்லியிருக்கிறார்
தனக்கு குழந்தை பிறக்கும் பாக்கியம் இல்லை என்று வெண்பா சொன்னதை கேட்டு மனைவியை பிரிந்த பாரதி, இந்த பிரச்சினை தெரிந்தும் வெண்பா ஏன் தன்னை திருமணம் செய்துகொள்ள ஆசைபபடுகிறாள் என்று யோசிக்காமல் இருக்கிறான். அப்படி யோசித்தால் தான் கதை முடிந்துவிடுமே.
Advertisment
Advertisements
இப்படியோ போய்க்கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் திடீர் ட்விஸ்டாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய வெண்பாவின் அம்மா கூடவே ரோகித் என்ற மாப்பிள்ளையை கையோடு அழைத்து வந்துவிட்டார். இதை பிடிக்காத வெண்பா முரண்டு பிடித்தாலும், அவளின் அம்மா தனது கிடுக்குபிடியின் மூலம் சம்மத்திக்க வைத்துவிட்டார்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெண்பா ரோகித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் ரோகித் அனாதை அவனை கட்டிக்க முடியாது என்று வெண்பா சொல்ல, நிச்சயத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். ஆனால் பாரதியின் அம்மா ரோகித்தை தான் தத்தெடுத்துக்கொள்வதாகவும், இனிமேல் அவன் தனது 3-வது மகன் என்றும் சொல்லி வெண்பாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.
அதன்பிறகு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை தொடர்ந்து பாரதியை தவிர மற்ற அனைவரும் வெண்பாவை பற்றி பேசிக்கொண்டிருக்கினறனர். ஆனால் ரோகித்துடன் நடந்த நிச்சயதார்த்ததை எண்ணி வெண்பா கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக தற்போது கண்ணம்மாவும் வெண்பாவுக்கு அட்வைஸ் சொல்லிவிட்டார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், இனிமேலாவது அடுத்தவர்கள் வாழக்கையை எப்படி கெடுப்பது என்று யோசித்து உன் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாமல், நல்ல வாழக்கையை அமைத்துக்கொள் அதையும் மீறி மீண்டும் பழையபடி எதாவது செய்ய முயற்சி செய்தால் கடவுள் இது மாதிரி ஒவ்வொரு சோதனையை உனக்கு கொடுத்துக்கொண்டே இருப்பார் என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.
மேலும் நீ எங்க அத்தை வீட்டுக்கு தானே மருமகளாக போகனும்னு ஆசப்பட்ட அதான் உன் வருங்கா புருஷன இப்போ எங்க அத்தை தத்தெடுத்துட்டாங்களே அப்புறம் என்ன உன் விருப்பப்படி அங்கேயே மருகளாக போ வெண்பா என்று சொல்கிறாள். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், வெண்பா அடுத்து என்ன செய்யப்போகிறாள். கண்ணம்மா மீண்டும் பாரதியுடன் இணைவாளா என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil