Bharathi Kannamma: மகளுக்கு ஆபத்து… கண்ணமாவிடம் சரண்டர் ஆகும் பாரதி?

Tamil Serial Update : பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannamma Serial New Promo Viral : விஜய் தொலைக்காட்சியின் அனைத்து சீரியல்களும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த சில வாரங்களாக பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமா கடத்தல், பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பாரதி கண்ணம்மா இருவரின் சந்திப்பு, மற்றும் கண்ணாம்மா பாரதி செல்பி என விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியல் தறபோது பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளது.

பாரதி-கண்ணம்மா இருவரும் இணைவார்களா என்பது ஒருபுறம் பெரிய கேள்வியாக இருந்தாலும் மறுபுறம் பாரதி அமெரிக்கா செல்வாரா என்பது இன்னொரு கேள்வியாக இருந்தது. இந்த கேள்விக்கு விடை சொல்லும் முயற்சியில் இறங்கிய, பாரதி தனது மகளுடன் வெளிநாடு செல்கிறேன் என கிளம்புகிறார். ஆனால் இடையில் ஹேமாவிற்கு திடீரென  உடல்நிலை மோசமாக இருப்பதால், உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். அப்போது ஹேமா சமையல் அம்மா என்று புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

இதனை பார்த்த மருத்துவர் ஹேமாவை காப்பாற்ற ஒரு வழிதான் இருக்கிறது என்று கூறி சமையல் அம்மாவை அழைத்து வர சொல்கிறார். இதற்கு பாரதி தனது அம்மா சௌந்தர்யாவிடம் சொல்ல அவரோ தன்னால் போகமுடியாது என்று சொல்கிறார். இதனால் வேறு வழியின்றி பாரதி சமையல் அம்மாவை அழைத்து வர புறப்படுகிறான.

இப்படி ஒரு புரொமோ வெளியாக பரபரப்பின் உச்சமாக கதை செல்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த ப்ரமோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma new promo going on viral in tamil update

Next Story
Tamil Serial Rating : ரோஜா மேலதான் கோபம் வருது, நாடகத்தை முடிங்க : ரசிகர்களை கடுப்பாக்கிய சீரியல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express