விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஃபரீனா ஆசாத். ஒரு தலை காதலுக்காக ஒரு பெண் எந்த எல்லைக்கும் செல்வாள் என்பது இவரின் வெண்பா கேரக்டர் ஒரு முக்கிய உதாரணம்.
Advertisment
அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் விமர்சனத்தையே பாராட்டுக்களை பெற்று வரும் ஃபரீனா ஆசாத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவரால் தான் பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்தது.
Advertisment
Advertisements
ஆனால் பாரதி கண்ணம்மாவின் கடந்த சில எபிசோடுகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது சீரியல் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று யூகிக்க முடியாத அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது.
அதேபோல் முக்கிய வில்லி கேரக்டரான வெண்பா சீரியலில் உள்ளதா அல்லது அந்த கேரக்டரை எடுத்துவிட்டார்களை என்றே டவுட்டாக உள்ளது. ஆனாலும் சீரியலில் அவ்வப்போது தலை காட்டும் வெண்பா தனது இருப்பை உறுதி செய்து வருகிறார்.
இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா ஆசாத் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் கர்ப்பமாக இருந்த காலத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
அதே சமயம் கடுமையாக விமர்சனங்களையும் சந்தித்து. ஆனாலும் இந்த விமர்சனங்களுக்கு ஃபரீனாவும் பதிலடி கொடுத்திருந்தார். இதனிடையே தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சீரியலில் சேலையில் தோன்றும் ஃபரீனா தற்போது மாடர்ன் உடையில் சுற்றுலா சென்றது தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் விஜய் டிவியின் ராஜூவீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியின் படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் சிகப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ராஜூ வீட்டு பார்ட்டிக்கு போனாம் அங்க என்னாச்சு தெரியுமா என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசகர்கள் என்னாச்சு சொல்லுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “