இரு குழந்தைகளுடன் இணைந்த பாரதி- கண்ணம்மா: இது எப்போ?!

Vijaytv serial Bharathi Kannamma : பாரதி மற்றும் கண்ணம்மா தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரல்

Bharathi Kannamma Serial

பாரதி மற்றும் கண்ணம்மா தங்களது இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் டிவி சீரியலில் தற்போது டிஆர்பியில் முன்னணியில் உள்ள சீரியல் பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியல் குடும்ப கதையையும், ஒரு பெண் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும் மையமாக வைத்து இயக்கப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மற்றும் குடும்ப இல்லத்தரசிகள் என்ற அனைவருக்கும் பிடித்த நாடகமாக விளங்குகிறது. இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து இளம் நடிகை ரோஷினி பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.மேலும் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் எபிசோட்களில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு பிறந்த இரு மகள்கள், தங்களது நடிப்பின் மூலம் வரவேற்பை பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணம்மாவிடம் ஒரு குழந்தையும் பாரதியிடம் ஒரு குழந்தையும் வளர்ந்து வருகிறது. எப்போது கண்ணாம்மாவை பாரதி புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வார் என ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சீரியலில் தங்களுக்கு மகள்களாக நடித்து வரும் இரு குழந்தைகளுடன் இணைந்து ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர் பாரதி மற்றும் கண்ணம்மா.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma serial cast with two babies photo goes viral

Next Story
கர்ணன் படத்தில் வரும் கொடியன்குளம் வன்முறை: சில அரசியல் விவாதங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com