Advertisment

பாரதி கண்ணம்மா இயக்குனர் புதிய சிரியல்; இவர்கள்தான் ஜோடி

பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடரில், நடிகர் திரவியம் ராஜ்குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார்.

author-image
WebDesk
New Update
dhiraviyam 1

பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடரில், நடிகர் திரவியம் ராஜ்குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடரில், நடிகர் திரவியம் ராஜ்குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார்.

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த நடிகர் திரவியம், விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்க புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் திரவியம் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார்.

சரவணன் மீனாட்சி, மகாநதி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களை இயக்கியவர் இயக்குநர் பிரவீன் பென்னட். இவர் தற்போது திரவியம் - ஸ்ரீதா சிவதாஸ் ஜோடியை வைத்து புதிய சீரியலை இயக்குகிறார். இந்த தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கிறார்கள். பிரவீன் பென்னட் இயகத்தில் திரவியம் - ஸ்ரீதா சிவதாஸ் ஜோடி நடிக்கும் இந்த புதிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த புதிய சீரியலின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும், இந்த சீரியலில் ஷாக்‌ஷி சிவா, நிமிஷா, சம்ரிதா, யமுனா சின்னதுரை, அவினாஷ், சுகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்ததன் மூலம் திரவியம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். அதே போல, ஸ்ரீதா சிவதாஸ் தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தவர். மேலும், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மீனாட்சி தொடரில் நடித்தவர். திரவியம் - ஸ்ரீதா சிவதாஸ் ஜோடி நடிக்கும் இந்த புதிய சீரியல் சின்னத்திரை பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment