உண்மையை உடைத்த கண்ணம்மா… சாட்சி சொன்ன சௌந்தர்யா… அதிர்ச்சியில் பாரதி

பாரதி கண்ணம்மா சீரியல் சமீப காலமாக ரசிகர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று சொல்லும் அளவுக்கு இருந்தது.

உண்மையை உடைத்த கண்ணம்மா… சாட்சி சொன்ன சௌந்தர்யா… அதிர்ச்சியில் பாரதி

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் கவனத்தை ஈக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சீரியல்கள் அவ்வப்போது பல அதிரடி திருப்பங்களுடனும், சில சமயங்களில் அவர்களின் பொறுமையை சோதிக்கும் வகையிலும் அமைகிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வந்த இந்த சீரியல் சமீப காலமாக ரசிகர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று சொல்லும் அளவுக்கு இருந்தது.

இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வரும் ரசிகர்கள் கூட ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் முடிந்துவிடும் அதுக்கு ஏன் இவ்வளவு சவ்வா இழுக்குறீங்க என்று கேட்க தொடங்கிவிட்டனர். ஆனாலும் சீரியல் வழக்கம்போல ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது ராஜா ராணி சீரியலுடன் இணைந்து மகா சங்கமமான சற்று விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே ஹேமாவின் பிறந்த நாள் அன்று அவளின் அம்மா யார் என்று சொல்வதாக பாரதி சொன்னதை நினைக்கும் ஹேமா அவனிடம் அம்மா எங்கே என்று கேட்கிறாள். ஆனால் சற்றும் யோசிக்காத பாரதி இறந்துபோன தனது முன்னாள் காதலி ஹேமாவின் படத்தை காட்டி இதுதான் உனது அம்மா என்று சொல்லிவிடுகிறான்.

இதை கேட்டு கோபமாகும் கண்ணம்மா எனக்கு பிறந்தது ரெட்டை குழந்தை. அதில் ஒரு குழந்தையை எனக்கே தெரியாமல் அத்தை எடுத்து வந்து வளர்த்து வந்தார். அதுதான் ஹேமா என்று சொல்கிறாள். இதை கேட்டு பாரதி ஷாக் ஆக அவள் சொல்வது எவ்வாம் உண்மை தான் என்று சௌந்தர்யா சொல்லி விடுகிறார்.

Barathi Kannamma - Raja Rani | Mahasangamam - Promo

இதை கேட்டு பாரதி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது கனவுதான் என்று கூறி வருகின்றனர். மறுபுறம் இந்த சீரியலில் எல்லாரும் சீரியஸா நடிச்சாலும் காமெடியாதான் இருக்கு என்று சொல்கின்றனர். தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bharathi kannamma serial new promo kannamma reveal the truth about hama

Exit mobile version