மகா சங்கமத்தை முடித்து திரும்பியுள்ள பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமாவுக்கு சௌந்தர்யா கண்ணம்மா பற்றி உண்மையை சொல்லி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சந்தேகம் என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றுதான் என்பதற்கு இந்த சீரியல் ஒரு சிறந்த எடுத்தக்காட்டு. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பாரதி தனக்கு குழந்தை பிறக்காது என்று தோழி சொன்ன பொய்யை நம்பி தற்போது குடும்பத்தை இழந்து நிற்கிறார்.
ஆனால் இந்த உண்மையை கண்டுபிடிக்க இந்த சீரியலில் யாரும் இன்னும் முயற்சிக்கவே இல்லை. கண்ணம்மா இதுநாள் வரை நம்மையே நினைத்துக்கொண்டிருக்கிறாள் நமக்குதான் உண்மை புரியவில்லையா என்று பாரதியும் யோசிக்கவில்லை. பாரதி ஏன் பொய்யை நம்பிக்கொண்டிருக்கிறார் இதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று கண்ணம்மாவும் யோசிக்கவில்லை.
அட ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தா எல்லா உண்மையும் தெரிஞ்சிடும் அதுக்காக இப்படி ஜவ்வு மாதிரி இழுக்காதீங்கப்பா என்று ரசிகர்கள் புலம்பி வருவது கேட்டாலும் இயக்குநர் அதற்கெல்லாம் செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இதனிடையே தன்னிடம் வளர்வது கண்ணம்மாவின் 2-வது மகள் என்று தெரிந்தாலும் அவள் மீது பாசத்தை குறைக்க பாரதியால் முடியவில்லை.
ஆனால் மறுபுறம் கண்ணம்மாவின் மற்றொரு மகள் லட்சுமி உணக்கும் எனக்கும் ஒரே அப்பாதான் என்று ஹேமாவிடம் சொல்லிவிடுகிறாள். இப்போது கண்ணம்மாவும் செளந்தர்யாவும் பள்ளிக்கு வர ஹேமா லட்சுமி சொன்னது குறித்து கேட்கிறாள். இதனால் அதிர்ச்சியடையும் சௌந்தர்யா தற்போது பாரதி தான் லட்சுமிக்கும் அப்பா என்றும், கண்ணம்மாதான் உனக்கும் அம்மா என்று உண்மையை சொல்லிவிட்டார்.

இதனால் அடுத்து என்ன ந்டக்’கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளுக்கு கூட உண்மை தெரிந்துவிட்டது ஆனால் இந்த பாரதிக்கு தெரிய இன்னும் எத்தனை ஜென்மம் ஆகுமோ என்று ரசிகர்கள் வெளிப்படையாக தங்களது கருத்தை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“