ஹேமா கண்ணம்மாவின் மகள் என்று தெரிந்தாலும் அவள் மீது பாசம் காட்டும் பாரதியிடம் லட்சுமி இனிமேல் உங்களை அப்பானுதான் கூப்பிடுவாள் என்று கண்ணம்மா சொல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடக்கத்தில் வரவேற்பு இல்லை என்றாலும், கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி நடைபயணம் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு சில அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறிய இந்த சீரியல் சமீப காலமாக ட்ராக் மாறி எதை நோக்கி செல்கிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சென்றுகொண்டிருந்தது.
ஆனால் தற்போது பாரதி கண்ணம்மா
இதனால் அதிர்ச்சியாகும் பாதி தனது அம்மா செளந்தர்யாவிடம் கேட்க அவரும் ஆமாம் கண்ணம்மாதான் ஹேமாவின் அம்மா என்று சொல்விடுகிறார். ஆனாலும் ஹேமா மீது பாசம் குறையாத பாரதி அவளை பிரிய மனமில்லாமல் இருந்து வருகிறான். அதே சமயம் லட்சுமி மீது அவனுக்கு வெறுப்பு அதிகமாகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கு அதிகரித்துள்ளது.
இதனிடையே அடுத்த எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாரதி கண்ணம்மாவிடம் வெண்பா தன்னை இனி அப்பா என்று கூப்பிடக்கூடாது என்று சொல்கிறார். ஆனால் லட்சுமி இனி உங்களை அப்பா என்றுதான் கூப்பிடுவாள். நானும் அப்படிதான் சொல்வேன். அப்பாவை அப்பா என்று கூப்பிடாமல் மாமா என்றா கூப்பிட முடியும் என்று கண்ணம்மா கேட்கிறாள்.

அதே சமயம் பாரதி நீ என்னை எவ்வளவு தூரம் நெருங்கினாலும் நான் உன்னை விட்டு விலகி போய்க்கொண்டே இருப்பேன் தனியா இல்ல ஹேமாவோடு என்று சொல்கிறான். இதனால் ஆத்திரமடையும் கண்ணம்மா நீங்கள் அப்படி செய்தால். அதன்பிறகு ஹேமா என்னிடம் வர நான் எந்த எல்லைக்கும்போவேன் என்று சொல்வதால் பாரதி ஷாக் ஆகிறான். தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“