விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில, இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு தலை காதல் தீவரமானால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை எக்ஸ்ட்ரீம் லெவலில் காட்டிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா. பிரிந்துள்ள பாரதி கண்ணம்மா இருவரும் எப்போது சேருவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் இவர்கள் பிரிவுக்கு காரணம் வெண்பா செய்த சூழ்ச்சிதான் என்பதை எப்போது வெளிக்கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதனிடையே தற்போது சீரியல் ட்ராக் மாறி தீவிரவாதிகள் பற்றிய கதையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற அவருடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அருண்பிரசாத், ரோஷனி ஹரிப்பிரியன், ஃபரீனா ஆசாத் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த் இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் ரோஷ்னி விலகினார்.
அவருக்கு பாதிலாக கண்ணம்மாவாக நடிக்க வந்த வினுஷா தேவி தொடக்கத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் தற்போது தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கட்டி வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ரோஷ்னி இடத்தை வினுஷா கைப்பற்றியுள்ளார் எனறு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது அருண்பிரசாத், வினுஷா, ஃபரீனா, ரூபாஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பாரதி கேரக்டரில் நடித்து வரும் அருண்பிரசாத்திடம் உங்களுக்கு ரோஷ்னி பிடிக்குமா அல்லது வினுஷா பிடிக்குமா என்று தொகுப்பாளார் ராஜூ கேட்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் அருண்பிரசாத், நான் சீரியலில் நடிக்க வரும்போது ரோஷ்னியும் புதுசு நானும் புதுசு அதனால அவங்களை எனக்கு ரொம்ப புடிக்கும். அதே சமயம் வினுஷா வரும்போது நான் 3 வருடம் அனுபவம் அதனால் இவங்க கூட நடிக்கிறது எனக்கு கம்பர்டஃபுளா இருந்துச்சு அதனால் இவங்களையும் எனக்கு ரொம்ப புடிக்கும் என்று சொல்கிறார். இதனால் கன்பியூஷ் ஆனா ராஜூ அட போங்கப்பா என்று சொல்லிவிடுகிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil