Bharathi Kannamma: சில விஷயங்கள் எல்லாம் குழந்தைகளிடம் சொல்ல முடியாது… கண்ணம்மா கண்ணீர்

கண்ணம்மா சமையல் அம்மாவாக அவனது வீட்டில் வந்து சமைத்தது பற்றியும், மொத்த குடும்பமும் சேர்ந்து பொய் சொன்னதையும் நினைத்து பாரதி கோபத்தில் குமுறுகிறான். அதனால், மது குடிக்கும் பாரதியைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகிறார்கள்.

bharathi kannamma serial, bharathi kannamma serial today episode, bharthi drinks alchohol, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி, பாரதி, கண்ணம்மா, பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு, bharathi family shocking, kannamma tears, lakshmi sad, bharathi kannamma, vijay tv

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் நடந்த கதையை சுவாரஸ்யம் குறையாமல் அதே விறுவிறுப்புடன் இங்கே காணலாம்.

வெண்பாவின் வேளைக்காரி சாந்தி, பொய் சொல்லி கண்ணம்மாவை பாரதி வீட்டுக்கு செல்ல வைத்ததால் கோபமடைந்த கண்ணம்மா, பொய் சொன்ன சாந்தியை கோணிப்பை போட்டு முகத்தை மூடி அடி வெளுத்து வாங்குகிறாள். கண்ணம்மாவிடம் அடி வாங்கிக்கொண்டு தப்பிய சாந்தி, “என்னை யாரோ போட்டு அடி வெளுத்துட்டாங்க. அது கண்ணம்மான்னு தான் நினைக்கிறேன்” என சொல்லி வெண்பாவை பாரதி வீட்டின் மாடியில் இருந்து கீழே அழைத்து வருகிறாள்.

சாந்தி, “இந்த கோணி பையை பொத்தி அடி வெளுத்துட்டா…” என வெண்பாவிடம் கூறுகிறாள். இதைக்கேட்ட வெண்பா, “அது எப்படி கண்ணம்மான்னு உறுதியா சொல்ற…” என கேட்கிறாள். அதற்கு, சாந்தி, “அவகிட்ட ஏற்கனவே நான் அடி வாங்கி இருக்கேன். அவ அடி எப்படி இருக்கும்னு எனக்கு நல்லா தெரியும்” சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறாள்.

இதையடுத்து, சாதி, “வாங்க நாம கிளம்புவோம். இப்பவே நாம கண்ணம்மா வீட்டுக்கு போவோம்” என்று வெண்பாவைக் கூப்பிடுகிறாள். அதற்கு வெண்பா, “இப்போ நம்ம ஏதாவது பண்ணா, நம்ம மேலதான் சந்தேகம் வரும். வேணாம்…” என்று சாந்தியை சமாதானம் செய்து உள்ளே அழைத்துக்கொண்டு போகிறாள்.

இதனிடையே, கண்ணம்மா, ஹேமா அவளது வாழ்வில் வந்ததை பற்றி நினைத்து பார்க்கிறாள். எட்டு வருடம் கழித்து ஹேமா, கண்ணம்மாவை பாரதி வீட்டிற்கு அழைத்து போனது குறித்து நினைத்துப் பார்க்கிறாள்.

“இவ்வளவு நாள் சமையல் அம்மா யாருன்னு தெரியாமல் ஹேமா நம்மகிட்ட பழகினதை பற்றி பாரதி எதுவும் சொல்லல. ஆனால், இப்ப நான்தான் சமையல் அம்மான்னு தெரிஞ்சு போச்சு. சும்மாவே என்னென்னவே யோசிக்கிற பாரதி இப்ப நான்தான் சமையல் அம்மான்னு தெரிஞ்சு என்ன பண்ண போறாரோ. லட்சுமி தான் என்னோட பொண்ணு என்பது சீக்கிரம் அவருக்கு தெரிஞ்சிடும். அதுக்கப்புறம் என்னவெல்லாம் நடக்க போகுதோ…” என்று நினைத்து கண்ணம்மா அழுதுகொண்டிருக்கிறாள்.

அப்போது அங்கே வரும் லட்சுமி, தனது அம்மா கண்ணம்மா அழுவதை பார்த்து வருத்தத்துடன், “அம்மா நான் பர்த்டே பங்க்ஷன்ல எதுவும் தப்பு பண்ணிட்டேன்னா? பாரதி அங்கிள அப்பான்னு கூப்பிடனும்னு நான் சொன்னது தப்பா அம்மா” என்று பரிதாபமாக கேட்கிறாள்.

இதற்கு கண்ணம்மா, “நான் அழறதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில விஷயங்கள் எல்லாம் குழந்தைகளிடம் சொல்ல முடியாது லட்சுமி. நீ போய் படு…” என்று லட்சுமியை அனுப்புகிறாள்.

இதனிடையே, சமையல் அம்மா யார் என்பது தெரிந்து பாரதி கோபத்தின் உச்சியில் இருக்கிறான். அதனால், பாரதி நன்றாக குடித்துவிட்டு ஹேமா சமையல் அம்மாவைப் பற்றி சொன்னதையெல்லாம் நினைத்துப் பார்கிறான். கண்ணம்மா சமையல் அம்மாவாக அவனது வீட்டில் வந்து சமைத்தது பற்றியும், அப்போது மொத்த குடும்பமும் சேர்ந்து அவனிடம் பொய் சொன்னதையும் நினைத்து கோபத்தில் குமுறுகிறான். அப்போது அங்கே வரும் குடும்பத்தினர், பாரதி மது குடித்து கொண்டிருப்பதை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் இத்துடன் நிறைவடைகிறது.

நன்றாக மது குடித்திருக்கும் பாரதி அடுத்தது என்ன செய்யப்போகிறானோ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால், அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்பதைக் காண காத்திருப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathi kannamma serial today episode bharthi drinks family shocking kannamma tears

Next Story
Baakiyalakshmi Serial: ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ண லவ் பண்ண போறியா எழில்?baakiyalakshmi serial, baakiyalakshmi serial today episode, baakiyalakshmi serial story, Chezhiyan asks Ezhil are you love with married Amirtha, பாக்கியலட்சுமி சீரியல், எழில், செழியன், பாக்யா, கோபி, ராதிகா, baakiyalakshmi, chezhiyan, Ezhil, Gopi, Radhika, Amirtha
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com