Advertisment

Bharathi Kannamma: ரொம்ப ஓவரா பேசுற பாரதி... உண்மையில் பாதிக்கப்பட்டவ கண்ணம்மாதான்!

பாரதி பேசுவதைக் கேட்ட வேணு, “நிறுத்துடா… ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க. பாதிக்கபட்டவன் நீ இல்லை. வயித்துல குழந்தையோட கண்ணம்மாவை வீட்டை விட்டு அனுப்புன இல்ல, இப்ப தனியா குழந்தையோட கஷ்டப்பட்டுட்டு இருக்காளே அவதான் பாதிக்கபட்டவ” என்று உறைக்கும்படி சொல்கிறான்.

author-image
WebDesk
New Update
barathi kannamma serial, vijay tv, barathi kannamma today episode, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி, பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு, பாரதியை திட்டிய வேணு, சௌந்தர்யா கோவிலில் மயக்கம், Bharathi Kannamma, Venu shouts Bharathi, Soundarya unconcious at temple, hema, lakshmi, hema birthday

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று நடக்கும் கதையை சுவாரஸியம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், ஹேமாவின் பிறந்தநாளில் சமையல் அம்மா யார் என்ற உண்மை பாரதிக்கு தெரியவந்ததால், மொத்த குடும்பமும் தன்னை ஏமாற்றி கண்ணம்மாவை ஹேமாவுடன் பழக விட்டிருக்கிறார்கள் என்று கோபத்தில் குமுறுகிறான். கோபத்தின் உச்சத்துக்கு சென்ற பாரதி, தனது வீட்டின் நடு ஹாலில் உட்கார்ந்து மது குடிக்கிறான். பாரதி வீட்டு ஹாலில் மது குடிப்பதைப் பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்போது அங்கே இருக்கும் ஹேமாவுக்கு பிரச்னை எதுவும் தெரியக்கூடாது என்பதற்காக அவளிடம் பர்த்டேக்கு வந்த கிப்ட் எல்லாத்தையும் போய் பிரிச்சு பாரு என சொல்லி அனுப்பி வைக்கிறான்.

ஹேமா உள்ளே போனதும், குடும்பத்தினர் அனைவரும் பாரதியைப் பார்த்து “ஏன் இப்படி குடிச்சிட்டு இருக்க…” என கேட்கிறார்கள். அதற்கு பாரதி, “நீங்க எல்லாரும் எனக்கு சண்டைக்காரங்க…” என சொல்கிறான்.

“ஏன்டா இப்ப என்னாச்சு, ஹேமா பர்த்டேன்னு எல்லோரும் சந்தோஷமா இருக்கும் போது, நீ ஏன் தனியா வந்து குடிச்சிட்டு இருக்க…” என்று வேணு குடித்துக்கொண்டிருக்கும் பாரதியிடம் கேட்கிறான்.

Advertisment
Advertisement

அதற்கு பாரதி, “நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கிறதுக்கு காரணம் அந்த கண்ணம்மா…” என சொல்கிறான். பாரதி கூறியதைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதையடுத்து தொடர்ந்து பேசும் பாரதி, “என்னோட அடுத்த கேள்வி கேட்கிறேன். அந்த சமையல் அம்மான்றது யாரு… இதுக்கும் நீங்க யாரும் பதில் சொல்ல மாட்டீங்க… நானே சொல்றேன். சமையல் அம்மா அந்த கண்ணம்மா… இன்னைக்கு அவள் வாசல்ல நிக்கும்போது, ஹேமா என்னை டாடின்னு கூப்பிட்டு இதான் சமையல் அம்மான்னு அறிமுகப்படுத்துறாள்.” என்று குடும்பதினர் இதுவரை தனக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த உண்மை தெரிந்துவிட்டதென்று கூறுகிறான்.

தொடர்ந்து பேசும் பாரதி, “உங்களுக்கு எல்லாம் சமையல் அம்மா யாருன்னு எப்போ இருந்து தெரியும். அன்னைக்கு வீட்ல ஸ்வீட் செய்றேன்னு அவளை கூட்டிட்டு வந்து கூத்தடிச்சு இருக்கீங்க… நான் எவ்வளவு அப்பாவியா இருந்து இருக்கேன் பாருங்க… ஹேமாவை திட்டம் போட்டு அவளோட பழக வைச்சு, எனக்கு தெரியக்கூடாதுன்னு அவளுக்கு சமையல் அம்மான்னு ஒரு பட்டப்பெயர் வேறா வைச்சு இருக்கீங்க. என்னை எல்லாரும் நம்ப வைச்சு கழுத்த அறுத்திட்டீங்க…” மது குடி வெறியில் கோபத்தில் ஆவேசமாக பேசுகிறான்.

அப்போது வேணு மற்றும் அகில் இருவரும் பாரதியை சமாதானப்படுத்த முன்வரும்போது, “நீங்க யாரும் பேசாதீங்க, என் வாழ்க்கைல யாரை சாகுற வரைக்கும் பார்க்க கூடாதுன்னு நினைச்சேனோ, அவகூட என் பொண்ணை பழக வைச்சு இருக்கீங்க. மொத எல்லாரும் வெளிய போங்க..” என்று பாரதி ஆவேசமாக கொந்தளிக்கிறான்.

பாரதி ரொம்ப ஓவராகப் பேசுவதைப் பார்த்த வேணு, “நிறுத்துடா… ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க. பாதிக்கபட்டவன் நீ இல்லை. வயித்துல குழந்தையோட கண்ணம்மாவை வீட்டை விட்டு அனுப்புன இல்ல, இப்ப தனியா குழந்தையை வைத்துகொண்டு கஷ்டப்பட்டுட்டு இருக்காளே அவதான் பாதிக்கபட்டவ” என்று பாரதிக்கு உறைக்கும்படி சொல்கிறான். பிரச்னை பெரியதாகி, சண்டையாகிவிடுமோ என்று நினைக்கும் அஞ்சலி, “எதுவாக இருந்தாலும் காலைல பேசிக்கலாம்” என அனைவரையும் அழைத்து செல்கிறாள்.

அவர்கள் எல்லோரும் போன பிறகு, பாரதி, ஹேமாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று அவளோடு இருக்கலாம் என பிளான் பண்ணுகிறான்.

இதனிடையே, கண்ணம்மா, இதுக்கு அப்புறம் என்னால ஹேமாக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. நான் உண்டு என் பொண்ணு உண்டுன்னு இருக்க போறேன் என்று நினைக்கிறாள். அப்போது, அங்கே சுமதி மாவு பாக்கெட்டோடு வருகிறாள். நெறைய பாக்கெட் விற்கவில்லை என கவலைபடுகிறாள்.

கண்ணம்மா விரக்தியாக பேசுவதை பார்த்து சுமதி, “என்னாச்சு, எதுவா இருந்தாலும் மனசுவிட்டு பேசிவிடு” என்று சொல்கிறாள். அதற்கு கண்ணம்மா, “அதெல்லாம் ஒன்னும் இல்லை” என கூறி அனுப்பி வைக்கிறாள்.

அடுத்த காட்சியில், பாரதி வீட்டில், கோயிலுக்கு போன சௌந்தர்யா வீடு திரும்பாததால் வேணுவும், அகிலும் பதற்றத்தில் இருக்கிறார்கள். அப்போது ஹாஸ்பிட்டலில் இருந்து போன் வருகிறது. போனில் சௌந்தர்யா கோவிலில் மயங்கி விழுந்து விட்டதாகவும், யாராவது வருமாறு கூறுகிறார்கள். அதன்பிறகு வேணு அகிலிடம் குழந்தையையும் அஞ்சலியையும் பார்த்து கொள்ளசொல்லிவிட்டு, தனியாக ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புகிறான். பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் நாளைய எபிசோடில், சௌந்தர்யாவுக்கு என்ன ஆனது? பாரதி திட்டமிட்டபடி ஹேமாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வானா? என்பதைக் காணலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bharathi Kannamma Serial Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment